டிரம்பை கௌரவப்படுத்த 3 பிரமாண்ட இட்லியை உருவாக்கிய உணவு கலைஞர்!

டொனால்ட் டிரம்பை வரவேற்க சென்னை உணவு கலைஞர் 107 கிலோ கொண்ட 3 பிரமாண்ட இட்லிகளை உருவாக்குகிறார்!!

Last Updated : Feb 24, 2020, 02:37 PM IST
டிரம்பை கௌரவப்படுத்த 3 பிரமாண்ட இட்லியை உருவாக்கிய உணவு கலைஞர்! title=

டொனால்ட் டிரம்பை வரவேற்க சென்னை உணவு கலைஞர் 107 கிலோ கொண்ட 3 பிரமாண்ட இட்லிகளை உருவாக்குகிறார்!!

முதல்முறையாக இந்தியாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மனைவி மெலானியா ட்ரம்புடன் இந்தியா வந்தடைந்தார். காலை 11.40 மணியளவில் தரையிறங்கும் எனக் கூறப்பட்டிருந்த அமெரிக்க அதிபரின் சிறப்பு தனி விமானம் ஏர்போர்ஸ் -1, 11.37 மணிக்கே அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

அதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே பிரதமர் மோடி அகமதாபாத் வந்தடைந்தார். பாதுகாப்பு குழுவினர் இறங்கிய பின்னர், மனைவி மெலானியாவுடன் விமானத்திலிருந்து இறங்கி வந்த அமெரிக்க அதிபர் டிரம்பை, பிரதமர் மோடி ஆரத் தழுவி வரவேற்றார். அதன் பின்னர் டிரம்ப் இணையருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியுடன் இணைந்து சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்த அமெரிக்க அதிபர், இரு புறமும் அரங்கேறிய பாரம்பரிய நடனங்களை பார்வையிட்டார்.

பின்னர் அங்கு தயாராக நின்றிருந்த பீஸ்ட் காரில் ஏறி அமெரிக்க அதிபரும், அவரது மனைவியும் சபர்மதி ஆசிரமம் நோக்கி புறப்பட்டனர். செல்லும் வழி எங்கும் அவர்களுக்கு ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரியத்தை விளக்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகள் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியா வந்துள்ள டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மற்றும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் ஆகியோருடன் மகள் இவான்கா மற்றும் மருமகன் ஜாரெட் குஷ்னருடன் விருந்தளிக்கும் வகையில், சென்னையை சேர்ந்த உணவு கலைஞர் ஒருவர் சுமார் 107 கிலோ உடைய 3 மோகா சைஸ் இட்லிகளை உருவாக்குகியுள்ளார். 

சென்னையை சேர்ந்த சமையல்காரரும் உணவு கலைஞருமான அமெரிக்க அதிபரும், பிரதமருமான நரேந்திர மோடிக்கு மரியாதை செலுத்தும் வகையில் பாரிய இட்லிகளை (அரிசி கேக்குகள்) தயாரித்துள்ளார். உணவு கலைஞரான இனியாவன் மூன்று பிரமாண்டமான இட்லிகளைத் தயாரித்துள்ளார் - பிரதமர் மோடியின் முகம் ஒரு இட்டிலியிலும், ஜனாதிபதி டிரம்ப் ஒன்றிலும், இந்தியா மற்றும் அமெரிக்கக் கொடியைக் கொண்டிருக்கும் மற்றொன்றையும், வருகை தரும் பிரமுகருக்கு வரவேற்பு அளிக்கும் வகையில்.

மூன்று பிரமாண்ட இட்லிகளின் எடை 107 கிலோகிராம் ஆகும். இது ஆறு தொழிலாளர்களின் உதவியுடன் இனியவன் தயாரிக்க சுமார் 36 மணி நேரம் ஆனதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியில் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கு தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்திற்கு வந்தபோது அமெரிக்க அதிபரை இன்று பிரதமர் மோடி வரவேற்றார். 

 

Trending News