துணை முதல்வர் மற்றும் மு.க. ஸ்டாலின் VIP பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது

தமிழக துணை முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இருவருக்கும் வழங்கப்பட்டு இருந்த VIP பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 9, 2020, 11:31 PM IST
துணை முதல்வர் மற்றும் மு.க. ஸ்டாலின் VIP பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது title=

புதுடெல்லி: தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (O Panneerselvam) மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் (DMK) தலைவர் மு.க. ஸ்டாலின் (MK Stalin) ஆகியோருக்கு பாதுகாவலாக இருந்த மத்திய பாதுகாப்பு படை வீரர்களை மத்திய அரசு திரும்ப பெறப்பட்டதாக அதிகாரிகள் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தனர்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு “ஒய்+” வகுப்பு (Y+) பாதுகாப்பும், அதேசமயம் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு “இசட்+”  (Z+) பாதுகாப்பு இருந்தது. இவர்களுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF - சிஆர்பிஎஃப்) கூடுதலாக பாதுகாப்பு வழங்கி வந்தது. நாடு முழுவதும் பல்வேறு முக்கிய தலைவர்களுக்கு அச்சுறுத்தலின் அடிப்படையில் விஐபி பாதுகாப்பை துணை ராணுவ இயக்கம் மூலம் மத்திய அரசு வழங்கி வருகிறது.

கடந்த 6 ஆம் தேதி தமிழக காவல் துறை அதிகாரிகளுடன், மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் நடத்திய ஆலோசனையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்ற அடிப்படையில் அவருக்கான பாதுகாப்பு திரும்ப பெறப்படுகிறது. அதேபோல திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட "இசட் பிரிவு" பாதுகாப்பும் திரும்பப் பெறப்பட்டதாக தெரிவித்துள்ள அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு இணையான பாதுகாப்பை தமிழக போலீஸ் தரப்பில் வழங்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Trending News