கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் குறித்து மத்திய அரசு அதிகாரிகள் 2 நாள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்!
கடந்த நவம்பர் 15 ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கோர தாண்டவத்தில் சுமார் 1,70,000 மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதுவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
புயல் கரையை கடந்த பின்னர் நிவாரணப் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. எனினும் சில பகுதிகளில் போதுமான வசதிகள் இன்னும் வந்த சேரவில்லை என மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதையடுத்து கஜா புயல் பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.353.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். மத்தியக் குழுவின் இறுதி அறிக்கைக்கு பிறகு நிவாரண நிதி கூடுதலாக ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தென்னை மரங்களை இரண்டு நாள் ஆய்வு செய்ய மத்திய அரசு அதிகாரிகள் தமிழகம் வந்துள்ளனர். தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்றும், நாளையும் தென்னை வளர்ச்சி வாரிய தலைவர் உட்பட 3 பேர் ஆய்வு செய்யது வருகின்றனர்.