காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்: EPS வாக்குறுதி

ராசிபுரம் தொகுதிக்கு மட்டும் தனியாக காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என பழனிசாமி  அறிவித்துள்ளார்!!

Last Updated : Apr 11, 2019, 12:42 PM IST
காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்: EPS வாக்குறுதி title=

ராசிபுரம் தொகுதிக்கு மட்டும் தனியாக காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என பழனிசாமி  அறிவித்துள்ளார்!!

நாடு முழுவதும் மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி உட்பட 13 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் என மொத்தம் 97 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிக்களுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 19 அன்று தொடங்கி 26 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தமிழகத்தில் தங்களின் ஆட்சியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பனுக்கு ஆதரவாக ராசிபுரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது பூரண கும்ப மரியாதையுடன் பெண்கள் வரவேற்றனர். அப்போது பேசிய அவர், ராசிபுரத்தில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.

நீர் மேலாண்மை திட்டங்களுக்கு தமிழக அரசு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தும் என்ற அவர், குடிமராமத்து பணிகள் மூலம் ஒரு சொட்டு நீர் கூட வீணாகமல் பாதுகாக்கப்படுவதாகக் கூறினார். காவிரி பிரச்சினைக்கு தி.மு.க.வினர் குரல் கொடுக்கவில்லை என்றும் 10 ஆண்டு காலம் நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்கவில்லை என்றும் முதலமைச்சர் குற்றம்சாட்டினார். நாமக்கல் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.

 

Trending News