முதலீடு என்பது நாம் நமது வாழ்க்கையில் உழைத்து சம்பாதித்த பணத்தை எதிர்கால திட்டங்களுக்காகவும், எதிர்பாரா நிகழ்வுகளுக்காகவும் சேமித்து வைக்கும் ஒரு செயல்முறையாகும். பணத்தை வீணாக்காமல், அதை வைத்து லாபம் காண முதலீடு செய்வது ஒரு நல்ல பழக்கம். எனினும், பலமுறை நாம் சரியாக விசாரிக்காமல் செய்யும் முதலீடுகள் நமக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துகின்றன. அப்படி சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரை சேர்ந்த மார்க் என்கிற பங்கு சந்தை முதலீட்டு நிறுவனத்திற்கு எதிராக மோசடி புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த நிறுவனத்திற்கு எதிரான 6 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி புகார் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும், பங்குச்சந்தை முதலீட்டு தொழில் செய்யும் "மார்க்" (MARC) என்ற நிறுவனம், தங்களிடம் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 26 சதவீதத்திற்கு மேலும், மாதத்திற்கு 2 சதவீதமும் பணம் திருப்பி லாபம் என உறுதியளித்ததை நம்பி, இரண்டரை லட்சம் முதலீடு செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
உறுதி அளிக்கப்பட்டது போல மே மாதம் வரை பணம் திருப்பி கிடைத்த நிலையில், ஜூன் மாதம் முதல் பணம். வரவில்லை என்றும், இதுதொடர்பாக கேட்டபோது, அலுவலத்தில் தணிக்கை நடைமுறை சார்ந்த சில பிரச்சினைகள் ஏற்பட்டதால் தாமதம் ஏற்பட்டதாக கூறியதாகவும், மீண்டும் திருப்பி கொடுக்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | தேர்ச்சி பெற்றவர்களை நிரந்தர ஆசிரியர்களாக நியமியுங்கள் - சீமான் வலியுறுத்தல்
ஆனால் மீண்டும் அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தப்போது அவர்கள் தலைமறைவாகிவிட்டது தெரியவந்ததாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மார்க் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கின் விசாரணையை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கண்காணிக்க உத்தரவிட்ட நீதிபதி, உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு, கார்த்திக்கின் மனுவை முடித்து வைத்தார்.
மேலும் படிக்க | குற்ற வழக்கு விசாரணைக்கு பொதுமக்கள் சாட்சிகளாக முன்வருவதில்லை: உயர் நீதிமன்றம் வேதனை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ