முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது வழக்குப்பதிவு; ரெய்டு எங்கெங்கே

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி வீடு உட்பட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 15, 2022, 09:05 AM IST
  • எஸ். பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை
  • ரூ 58.23 கோடிக்கு கூடுதலாக சொத்து சேர்க்கை
  • 13 பேர் மீது வழக்குப்பதிவு
முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது வழக்குப்பதிவு; ரெய்டு எங்கெங்கே title=

கோவையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். 

அதன்படி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது சகோதரர் அன்பரசன், அவரது மனைவி ஹேமலதா உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், வேலுமணியுடன் கூட்டு சேர்ந்து ஊழல் செய்ததாக 6 நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிந்துள்ளனர். மேலும் எஸ். பி. வேலுமணியின் உதவியாளர் சந்தோஷ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | ஆவின் முதல் விருது நகர் சிறைச்சாலை வரை... ராஜேந்திரபாலாஜியின் கண்ணாமூச்சி ஆட்டம்...

ரூ 58.23 கோடிக்கு கூடுதலாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி மற்றும் குடும்பத்தினர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அத்துடன் எஸ். பி‌ வேலுமணியின் சகோதரர் அன்பரசனின் வீடு, கடை, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். 

கடந்த 2016 முதல் 2021 ஆம் ஆண்டில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக 58 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் கோவை சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் எஸ். பி. வேலுமணிக்கு தொடர்புடைய நபர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக சென்னையில் 8 இடங்களிலும், சேலத்தில் 6 இடங்களிலும், நாமக்கல், கிருஷ்ணகிரியில் ஒரு இடத்திலும், திருப்பத்தூரில் 2 இடங்களிலும், கோவையில் 41 இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க | நீதிபதியை கத்தியால் குத்திய அலுவலக உதவியாளர்; சேலம் நீதிமன்றத்தில் பரபரப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News