விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் இன்று மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இதற்கு விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமை வகித்தார்.
புஸ்ஸி ஆனந்த் பேச்சு..
மகளிர் அணியின் ஆலோசனை கூட்டத்தில் பேசிய புஸ்ஸி ஆனந்த், மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து மகளிரணி தலைவிகள் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார். அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர் தளபதியை காண வந்திருப்பதாக தெரிவித்ததாகவும் அவர் தற்போது ஊரில் இல்லை என்று கூறிதான் அழைத்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
லியோ இசை வெளியீட்டு விழா குறித்து..
அந்த கூட்டத்தில் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், அப்படத்தின் இசை வெளியீட்டு விழா இம்மாதம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். மேலும் இவ்விழாவில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்களது பெயரை மாவட்ட நிர்வாகிகளிடம் கொடுக்கலாம் எனவும் கூறினார். இதையடுத்து, லியோ படவிழா இம்மாதம் நடைபெற உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | G20 Dinner: இரவு விருந்தில் பங்கேற்க டெல்லி வந்தடைந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்
“விஜய் என்று அழைக்கக்கூடாது..”
மகளிரணி கூட்டத்தில் கலந்து கொண்ட பெண் ஒருவர், தன்னை மிகப்பெரிய விஜய் ஃபேன் என்று கூறி அறிமுகப்படுத்திக்கொண்டார். ‘விஜய்’ என்று பெயரை அவர் குறிப்பிட்டு பேசியதை அடுத்து, புஸ்ஸி ஆனந்த் அவரை “தலைவன் பெயரை சொல்லக்கூடாது..” என்று கூறினார். மேலும், “அவரை தளபதி என்று மட்டும்தான் சொல்ல வேண்டும்..” என்றும் குறிப்பிட்டார்.
நெட்டிசன்கள் விமர்சனம்:
புஸ்ஸி ஆனந்த் விஜய்யை தளபதி என்று அழைக்க வேண்டும் என கூறியது தற்போது விவாதத்தை கிளப்பியுள்ளது. இதை நெட்டிசன்கள் கண்டண்டாக மாற்றி அவரை வைத்து மீம்ஸ்களையும் பதிவேற்றி வருகின்றனர். ஒரு தரப்பினர், “நடிகர் விஜய்யே அவர் பெயரை எப்படி அழைத்தாலும் கவலை படப்போவதில்லை. நீங்கள் ஏன் இவ்வள்வு அலட்டிக்கொள்கிறீர்கள்..” என்று கேள்வியெழுப்பியுள்ளனர்.
மேலும் படிக்க | “தமிழகத்தில் அவர்களால் வெல்லவே முடியாது..” பாஜக-வை சூசகமாக குட்டும் உதயநிதி..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ