ஆறு வருடங்களுக்கு பின்ன பேருந்து கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து மாணவர்களும் போராட்டம் நடர்த்தி எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அந்த நடவடிக்கை சரியானதே என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேருந்து கட்டண உயர்வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
எரிப்பொருள் விலையேற்றம், ஊதிய உயர்வு, பராமரிப்பு கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பேருந்து கட்டணத்தை ஏற்றுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த சனிக்கிழமை முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.66 சதவீத கட்டண உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபொது கூறுகையில்; பேருந்து கட்டண உயர்வு சரியானதே. போக்குவரத்து துறை நலிவடைந்துள்ளது. எரிபொருள் விலை உயர்வு மற்றும் நிதி நோக்கங்களின் காரணமாக போக்குவரத்து கட்டணம் அதிகரித்துள்ளது. வாக்காளர் அரசியலின் காரணமாக பின்னர் அரசு கட்டணத்தை உயர்த்தவில்லை என்று தெரிவித்தார்.
TN Govt didn't raise bus fare for 6 years. It is hiked now & is essential due to fuel price hike & financial purposes. The then govt didn't hike fares due to vote politics. Hadn't it been the case, fares would've been hiked gradually: Pon Radhakrishnan, TN Minister (21.01.2018) pic.twitter.com/sP0gPoIXL2
— ANI (@ANI) January 22, 2018