ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் சுரேஷ் (42) புதன்கிழமை உயிரிழந்தார்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பண்டாரசெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அய்யாசாமி- சாலம்மாள் தம்பதியரின் மகன் சுரேஷ் (42).
இவர் 20 ஆண்டுகளாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரராகப் பணிபுரிந்து வந்தார்.
உயிரிழந்த வீரர் சுரேஷின் உடல் விமானம் மூலம் கோவைக்கு எடுத்து வரப்பட்டு, அங்கிருந்து எல்லைப் பாதுகாப்புப் படை வாகனத்தில் பண்டாரசெட்டிப்பட்டிக்கு கொண்டு வரப்படுகிறது.
இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் அவரது உடல் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும். அவருக்கு மனைவி ஜானகி, மகள் புன்னகை, மகன் ஆதர்ஷ் ஆகியோர் உள்ளனர்.
Dharmapuri(Tamil Nadu): Family of BSF jawan A Suresh(who lost his life in ceasefire violation in RS Pura) in mourning pic.twitter.com/jun8n5e73g
— ANI (@ANI) January 19, 2018