சிசிடிவி கேமராவை துணியால் மறைத்து பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு

Crime News Today: சீர்காழியில் வீட்டில் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 22, 2022, 06:13 PM IST
சிசிடிவி கேமராவை துணியால் மறைத்து பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு title=

Crime News Today: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பாதரக்குடி புறவழிச்சாலை லட்சுமணன் நகரை சேர்ந்தவர் வெற்றிவளவன் (வயது 45). இவர் வெளிநாட்டில் வேலை செய்து  வருகிறார். இந்நிலையில் தற்போது விடுமுறைக்காக சொந்த ஊர் வந்துவிட்டு மீண்டும் வெளிநாடு செல்ல நேற்று புறப்பட்டார். அவரை சென்னை விமான நிலையத்திற்கு வழி அனுப்ப அவரது மனைவி சூரியகாந்தி (வயது 40) மற்றும் மருமகள் ஆகியோர் சென்றிருந்தனர். வெளிநாடு அனுப்பிவிட்டு , சென்னையில் இருந்து மீண்டும் நள்ளிரவு சூரியகாந்தி வீடு திரும்பியுள்ளார். அப்பொழுது வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ந்து  உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து மூன்றரை பவுன் தங்க நகைகள் திருட்டுப் போனது தெரிய வந்தது. 

இது குறித்து சூரியகாந்தி சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சீர்காழி காவல் ஆய்வாளர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நாகையிலிருந்து மோப்பநாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

வீட்டுக்குள் நுழைந்து சிசிடிவி கேமராவை மறைத்து வீட்டிற்குள் திருட செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து சீர்காழி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: திருட போன கடைக்கு கடிதம் போட்ட திருடன்!

மேலும் படிக்க: பலே திருடர்கள் - சிசிடிவியில் பதிவான செருப்பை வைத்து துப்பு துலக்கி கெத்து காட்டிய போலீசார்

மேலும் படிக்க: இந்தியாவையே நடுநடுங்க வைத்த தக்கர் கொள்ளையர்கள்.! வரலாற்றின் பின்னணி

மேலும் படிக்க: நாட்டையே அலறவிட்ட செல்போன் திருட்டு - 2 வருடங்களாக தொடரும் கண்டெய்னர் கொள்ளையர்கள்!

மேலும் படிக்க: ஈரோடு : பூட்டிய வீடுகளில் கில்லாடி தனத்தை காட்டிய தெலுங்கானா தம்பதிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News