திமுகவின் செய்தித் தொடர்பாளர்களா IAS, IPS அதிகாரிகள்? எச்சரிக்கும் ஹெச்.ராஜா

திமுகவினரைப் போல் மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைக்கும் IAS, IPS அதிகாரிகளுக்கு ஹெச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 01:53 PM IST
  • ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு ஹெச்.ராஜா எச்சரிக்கை
  • ஒன்றிய அரசு என அழைக்கக்கூடாது
  • பொங்கல் பரிசுத் தொகுப்பில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது
திமுகவின் செய்தித் தொடர்பாளர்களா IAS, IPS அதிகாரிகள்? எச்சரிக்கும் ஹெச்.ராஜா title=

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சரவையினர் மத்திய அரசை ’ஒன்றிய அரசு’ என அழைத்து வருகின்றனர். இதற்கு தொடக்கம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பா.ஜ.கவினர், பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் திமுக அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், திமுகவினரைப்போல் மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைக்கும் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ALSO READ | தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் ₹1000 கோடி ஊழல்: H. ராஜா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவினரைபோல் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைக்கக் கூடாது எனத் தெரிவித்தார். அவர்களை எப்போது வேண்டுமானாலும் பணியிட மாற்றம் செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளதாக தெரிவித்த ஹெச்.ராஜா, இதனை உணர்ந்து அதிகாரிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறிய அவர், மரத்தூள் மற்றும் இலவம் பஞ்சு கொட்டைகளை கொள்முதல் செய்து மிளகாய்தூள், மிளகு என மக்களுக்கு வழங்கியிருப்பதாகவும் தெரிவித்தார். மதமாற்ற வற்புறுத்தல் காரணமாக மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர் கூறினார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும் என ஹெச். ராஜா வலியுறுத்தியுள்ளார். மாணவி தற்கொலை விவகாரத்தில் சகாய மேரி, ராக்லின் மேரி கைது செய்யும் வரை மாணவி லாவண்யாவின் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறிய அவர், தமிழக காவல்துறை நேர்மையாக செயல்படவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

ALSO READ | ஹெச்.ராஜா மீது கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News