பாஜக உடன் கூட்டணி வைக்கும் எந்தக் கட்சியும் வெற்றி பெற முடியாது - கே.எஸ்.அழகிரி

தமிழகத்தில் பாஜக உடன் கூட்டணி வைக்கும் எந்தக் கட்சியும் வெற்றி பெற முடியாது எனவும், திமுக அரசு செயல்படுத்தும் திட்டங்களில் உடனபடாத எதையும் ஆதரிக்க மாட்டோம் என்றும் தமிழக காங் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : May 5, 2023, 07:18 AM IST
  • ஆர்.என்.ரவி என்கிற தனி மனிதர் என்ன வேண்டுமானாலும் பேசலாம்.
  • ஆனால் ஆளுநர் ரவி எதையும் பேசக்கூடாது.
  • ஆளுநர் கருத்து எல்லை மீறிய செயல்.
பாஜக உடன் கூட்டணி வைக்கும் எந்தக் கட்சியும் வெற்றி பெற முடியாது - கே.எஸ்.அழகிரி title=

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் அளித்த பேட்டியில், "கர்நாடகத்தில் காங்கிரஸ் 140 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மோடியின் ஆட்சி விளம்பரத்திற்காக செய்யப்பட்ட ஆட்சி. சாதி மதம் மொழியை சொல்லி சிறிது காலத்திற்கு பயன்பெற்றனர். நெடுதொலைவிற்கு பயன்பெற முடியவில்லை.  ஆர்.என்.ரவி என்கிற தனி மனிதர் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் ஆளுநர் ரவி எதையும் பேசக்கூடாது. திராவிட மாடலை எடப்பாடி, அண்ணாமலை ஆகியோர் விமர்சிக்கலாம். ஆளுநர் கருத்து எல்லை மீறிய செயல். அவரவர் கொள்கை தான் உயர்ந்தது. அதனை ஆளுநர் விமர்சிப்பது சரியானது அல்ல. அதனை விமர்சிப்பது அருவருக்கத்தக்க ஒன்று. சனாதன தர்மத்தை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என இதுபோன்று பேசுகிறார்கள். வெறுப்பையும், விஷமத்தையும் ஆளுநர் கக்குகிறார்.

மேலும் படிக்க | ஏற்காடு செல்வோர் கவனத்திற்கு! இந்த வாகனங்களுக்கு அனுமதி இல்லை!

எங்கள் கூட்டணிக்குள் சண்டை வந்து நாங்கள் பிரிந்தால் நன்றாக இருக்கும் என ஆசைப்படுகிறார்கள். அரசு செயல்படுத்தும் திட்டங்களில் எங்களுக்கு உடன்பாடாத எதையும் நாங்கள் ஆதரிப்பதில்லை. 12 மணி நேர வேலை மசோதாவை உடனே எதிர்த்தோம். ஒரு ஆட்சி என்பது சில நேரங்களில் மாறிக்கூட போகும். அதில் தவறில்லை. அரசில் பல்லாயிரக்கணக்கான அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் இதுபோன்ற முடிவை எடுத்திருக்கலாம். ஆனால் இறுதி முடிவை முதல்வர் எடுக்கிறார். உடனடியாக மாற்றி விடுகிறார். அதனை வரவேற்கிறோம். மது விவகாரத்தில் எங்களுக்கு உடன்பாடே கிடையாது. அதை நாங்கள் எதிர்க்கிறோம். தமிழர்கள் முன்னேற மதுக்கடைகளை மூட வேண்டும். மதுவிற்பனையை முற்றிலுமாக தடுக்க வேண்டும். தமிழகத்தில் எந்தக்காலத்திலும் பாஜக கூட்டணி வைக்கும் எந்த கட்சியும் வெற்றி பெற முடியாது. திமுக கூட்டணி வலுவாக உள்ளது. எங்கள் வாக்கு வங்கி பலமாக உள்ளது. மதம் வேண்டும் என்கிறோம். ஆனால், மதவெறி கூடாது" என தெரிவித்தார்.

மறுபுறம் 12 மணி நேர வேலை மசோதாவை வாபஸ் பெற்றது தேவையில்லாத ஒன்று என்று முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்துள்ளார்.  கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உள்ளது சில விஷயங்களை ஆளுநர் கோடிட்டு காட்ட வேண்டியது அவசியமானது. ஆளுநர் பேசியது சரியானதாக இருந்தால் அதனை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே என நெல்லையில் தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.  நெல்லை மாவட்ட இந்து முன்னணி அலுவலகம் நெல்லை டவுன் மவுண்ட் ரோடு பகுதியில் புதிதாக திறக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி பி ஜெயக்குமார் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் மட்டும் தான் திராவிடத்தை பற்றி பேசி வருகிறோம். திராவிடம் என்பது தமிழ். தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளை உள்ளடக்கியது. மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும் மக்களுக்காக நல்ல சட்டங்களை கொண்டு வர வேண்டும். 

மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் மக்கள் மனதில் இடம்பெற வேண்டும், இதுதான் நல்லாட்சியின் அடையாளம். திராவிட நாடு ஆட்சி என்பது எந்த வகையில் உள்ளது என்பது எனக்கு தெரியவில்லை, இரண்டு ஆண்டுகள் திமுக ஆட்சியில் அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாக இந்த திட்டமும் செயல்பாட்டுக்கு வரவில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக பல காவல் நிலையங்களில் புகார் அளித்தால் அதற்கான மனு ரசீது கூட கொடுப்பதில்லை. திமுக ஆட்சி அமைவதற்கு முன்பே ஆட்சி அமைந்த ஒரு மணி நேரத்தில் மணல் அள்ளிக்கொள்ளலாம் என திமுகவைச் சேர்ந்த ஒருவர் பேசினார் அதுதான் இப்போது நடக்கிறது. எல்லோருக்கும் பாதுகாப்பு இருந்தால் மட்டுமே அமைதி பூங்கா என சொல்ல முடியும் குறிப்பிட்ட சில விஷயங்களை மட்டும் பாதுகாப்பு ஒரு சிலருக்கு மட்டும் பாதுகாப்பு என இருந்தால் எப்படி சமமான ஆட்சியாக இது இருக்க முடியும். 12 மணி நேர வேலை மசோதாவை திமுக தான் சட்டமன்றத்தில் கொண்டு வந்தது இந்த சட்டம் எல்லா தொழிற்சாலைகளுக்கும் பொருந்தாது.சில தொழில்சாலைகள் எல்லா வகையிலும் உற்பத்தியை பெருக்கும் வகையில் சில தொழிற்சாலைகளுக்கு மிச்சப்படுத்தும் வகையிலும் தான் உள்ளது. இந்த சட்டத்தை வாபஸ் பெற்றது தேவையில்லாத ஒன்று என தெரிவித்தார். தமிழக அரசு குறித்து ஆளுனர் பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன் கருத்து சுதந்திரம் என்பது எல்லோருக்கு உள்ளது.சில விசயங்களை கோடிட்டு காட்டவேண்டியது ஆளுனருக்கு அவசியமானது.அவர் பேசுயது சரியாக இருக்குமேயானால் அதனை அரசு ஏற்றுகொள்ளவேண்டியது தானே என அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | நாடாளுமன்றத்துக்கு போகாத அன்புமணி ராமதாஸ் டெல்லியில் கேட்க தைரியம் இருக்கிறதா? - செந்தில் பாலாஜி கேள்வி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News