இந்திய அணியில் எனக்கு இடமில்லையா? பளீச்சென்று பேசிய நடராஜன்!

Natarajan On Team India: போதிய அளவில் இந்திய அணியில் விளையாடாததற்கான காரணம் குறித்து நடராஜன் தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Jul 26, 2024, 01:27 PM IST
  • பிசிசிஐ வீரர்களிடம் எந்தவொரு ஏற்ற தாழ்வுகளையும் பார்ப்பதில்லை - நடராஜன்
  • நான் சினிமாவில் நடிக்க வாய்ப்பே இல்லை - நடராஜன்
  • டிஎன்பிஎல் தொடரில் தற்போது திருப்பூர் தமிழன்ஸ் அணிக்காக நடராஜன் விளையாடி வருகிறார்.
இந்திய அணியில் எனக்கு இடமில்லையா? பளீச்சென்று பேசிய நடராஜன்! title=

Natarajan On Team India: மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்திய கிரிக்கெட் வாரியம் எனக்கு போதுமான அளவு வாய்ப்புகள் அளிக்கிறது, காயங்கள் காரணமாக சில போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. கிரிக்கெட்டில் அரசியல் எதும் நடைபெறவில்லை. 

கிரிக்கெட் வாரியம் வீரர்களிடம் எந்தவொரு ஏற்ற தாழ்வுகளையும் பார்ப்பதில்லை, கிரிக்கெட் வாரியம் மற்றும் சக வீரர்களின் ஒத்துழைப்பால்தான் நான் இந்திய கிரிக்கெட் அணியில் வீரராக உருவாகி உள்ளேன், ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்று சிறப்பாக விளையாடி உள்ளேன். 

சினிமாவுக்கு வர வாய்ப்பிருக்கா...?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு பிறகு ரசிகர்கள் அதிகம் பார்க்கும் கிரிக்கெட் போட்டியாக தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் மாறி உள்ளது. டிஎன்பிஎல் தொடரில் இருந்து 15 கிரிக்கெட் வீரர்கள் உருவாகி உள்ளனர், டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் கிராமப்புற வீரர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | உடலுறவை தடுக்க இந்த மாதிரி நடவடிக்கையா...? ஒலிம்பிக் கிராமத்தின் படுக்கைகளும் சர்ச்சையும்!

டிஎன்பிஎல் தொடர் தொடக்கத்தை விட தற்போது முன்னேற்றம் அடைந்து உள்ளது. கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இளைஞர்கள் கடின உழைப்பால் உயர்ந்த நிலைக்கு செல்லலாம். இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்க்கு பெற்றோர்கள் ஊக்கம் அளிக்கிறார்கள். மீடியா முன் பேசுவதற்கே தயக்கமாக உள்ளது, பின்னர் எப்படி சினிமாவில் நடிப்பேன், சினிமாவில் நடிக்க வாய்ப்பே இல்லை" என கூறினார்.

மிரட்டும் நடராஜன்!

முன்னதாக, தமிழ்நாட்டின் சேலம், கோவை, திண்டுக்கல், நெல்லை, சென்னை ஆகிய நகரங்களில் 2024ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் ஜூலை 5ஆம் தேதியில் தொடங்கி, ஆக. 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்காக நடராஜன் விளையாடி வருகிறார். இவர் நடப்பு தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். 

இவர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடராஜனை தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஐபிஎல் தொடரில் 19 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்த நடராஜன், அதில் சன்ரைசர்ஸ் அணியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர் ஆவார். ஐபிஎல் 2024 தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் நான்காவது இடத்தை பிடித்திருந்தார். 

தொடர்ந்து, சிறப்பாக பந்துவீசினாலும் நடராஜனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. டி20 உலகக் கோப்பை, ஜிம்பாப்வே மற்றும் இலங்கை சுற்றுப்பயணம் ஆகியவற்றில் நடராஜன் தேர்ந்தெடுக்கப்படாதது தொடர்ந்து பேசப்பட்டு வந்தன. தென்னிந்திய வீரர் என்பதால் நடராஜனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக தொடர்ந்து கருத்து தெரிவிக்கப்பட்டது. தற்போது இதனை நடராஜனே மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடராஜன் இதுவரை 4 டி20ஐ போட்டிகள், 2 சர்வதேச ஓடிஐ போட்டிகள், 1 டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளார். 

மேலும் படிக்க | பள்ளி குழந்தைகளை காப்பாற்றிய ஓட்டுனருக்கு முக ஸ்டாலின் நிதியுதவி! எவ்வளவு தெரியுமா?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News