நாங்குநேரியில் மீண்டும் சம்பவம்... நாட்டு வெடிகுண்டு வீசிய மாணவன் கைது - முழு விவரம்

Tirunelveli Nanguneri Attack: நெல்லை மாவட்டம் நான்குநேரி அருகே தனியார் தொலைக்காட்சி நிரூபர் வைத்திருந்த ஜெராக்ஸ் கடையில் மீது 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Nov 21, 2023, 12:29 PM IST
  • நாட்டு வெடிகுண்டு வீசிய மாணவனை போலீசார் கைது செய்தனர்.
  • முன்விரோதம் காரணமாக மாணவன் குண்டுவீசியிருக்கலாம் என தகவல்.
  • நாங்குநேரியில் சில மாதங்களுக்கு முன் பள்ளி மாணவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
நாங்குநேரியில் மீண்டும் சம்பவம்... நாட்டு வெடிகுண்டு வீசிய மாணவன் கைது - முழு விவரம் title=

Tirunelveli Nanguneri Attack: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருமாள் சன்னதி தெருவை சேர்ந்தவர் வானமாமலை (50). இவர் நாங்குநேரி நீதிமன்றம் மற்றும் தாலுகா அலுவலகம் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். மேலும் தனியார் தொலைக்காட்சியின் நிரூபராக உள்ளார். இன்று காலையில் வழக்கம் போல் வானுமாமலை மற்றும் அவரது மனைவி ஆகியோர் 9 மணியளவில் கடையை திறந்துள்ளார். 

அப்போது மோட்டார் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வானமாமலை கடையை நோக்கி வீசி உள்ளனர். ஆனால், முதலில் வீசிய அந்த வெடிகுண்டு  வெடிக்கவில்லை. தொடர்ந்து இரண்டாவது குண்டை எடுத்து வீசும் போது கடையில் முன்பு விழுந்து வெடித்துள்ளது.

மேலும் படிக்க | வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டும்-துரை முருகன்

இதனைத் தொடர்ந்து மூன்றாவது குண்டை கீழே போட்டுவிட்டு அந்த அடையாளம் தெரியாத நபர் மோட்டார் பைக்கில் தப்பி ஓடி விட்டார். வெடிக்காமல் கீழே கிடந்த நாட்டு வெடிகுண்டை நாட்டு வெடிகுண்டு நிபுணர்கள் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் நாங்குநேரி மருகால்குறிச்சியை சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன்தான் குண்டு வீசியதாக தெரியவந்துள்ளது.

முதற்கட்ட தகவல்

சம்பவ இடத்திற்கு நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து வானுமாமலை வீட்டிற்கும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். அந்த மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது வெளியாகி உள்ள முதற்கட்ட தகவல்களின்படி, மாணவன் பயிலும் பள்ளியில் ஏற்பட்ட ஒரு சிறு மோதலை, நிரூபர் வானமாமலை செய்தியாக்கி உள்ளார். இதனால் வானமாமலை மீது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தற்போது அந்த மாணவன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து வானுமாமலை வீட்டிற்கும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

நாங்குநேரி தாக்குதல் சம்பவம்

 

அண்மையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாங்குநேரியில் வீடு புகுந்து ஒரு மாணவரை சக பள்ளி மாணவர்கள் அரிவாளால் வெட்டிய வழக்கு அனைவரும் அறிந்தது. அந்த சம்பவத்திற்கும் இந்த நாட்டு வெடிகுண்டு வீச்சு சம்பவத்திற்கும் தொடர்பிருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

கடந்த ஆக. 9ஆம் தேதி, வள்ளியூர் அரசு உதவிபெறும் மேல்நிலை பள்ளியில் பயிலும் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த மாணவர் மீதும், அவரின் தங்கை மீது, அதே பள்ளியில் படித்து வந்த 17 வயதுடைய 12ஆம் வகுப்பு மாணவர்கள் நான்கு பேர் மற்றும் இரண்டு சிறார் உட்பட ஆறு பேர் வீடு புகுந்து தாக்குதல் நடத்தினர். அந்த வழக்கில், அந்த 6 பேர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களை நெல்லை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

மேலும் படிக்க | ஆவின் டிலைட் பாலின் விலை உயர்வா? வானதி சீனிவாசன் கடும் கண்டனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News