பொன்முடி எம்எல்ஏவாக தொடர வாய்ப்பு... தண்டனை நிறுத்தி வைப்பு - இடைத்தேர்தல் வருமா வராதா?

Former Minister Ponmudi Case: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட மூன்றாண்டு கால சிறை தண்டனையை நிறத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அவரது மனைவிக்கும் பொருந்தும். 

Written by - Sudharsan G | Last Updated : Mar 11, 2024, 03:51 PM IST
  • பொன்முடி மீண்டும் எம்எல்ஏவா தொடர வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக சில நாள்களுக்கு அறிவிப்பு வெளியானது.
  • இதுகுறித்து சட்டப்பேரவை செயலகம் விளக்கம் கொடுத்துள்ளது.
பொன்முடி எம்எல்ஏவாக தொடர வாய்ப்பு... தண்டனை நிறுத்தி வைப்பு - இடைத்தேர்தல் வருமா வராதா? title=

Former Minister Ponmudi Case Update In Tamil: திமுகவின் கடந்த 2006 - 2011ஆம் ஆட்சிக்காலத்திலும் பொன்முடி, உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக 2011ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்தது.

லஞ்ச ஒழிப்புத்துறையால் பதியப்பட்ட இந்த வழக்கை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. கடந்த 2016ஆம் ஆண்டு, இவ்வழக்கில் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து உத்தரவிட்டது.

தண்டனையும் மேல்முறையீடும்...

விழுப்பும் சிறப்பு நீதிமன்றம் பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து உத்தரவிட்ட தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். தொடர்ந்து, பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து கடந்தாண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதி தீர்ப்பளித்தார்.

மேலும் படிக்க | தமிழக பள்ளிக்கல்வித் துறையின் பேஸ்புக் பக்கம் ஹேக்! விஜய் பட காட்சிகள் பதிவேற்றம்

தீர்ப்பை தொடர்ந்து, டிசம்பர் 21ஆம் தேதி இருவருக்கும் தலா மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும், அபராதத்தை செலுத்த தவறினால் ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவில் தெரிவித்திருந்தார். 

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு

தண்டனை விதிக்கப்பட்ட இருவரின் வயது மற்றும் மருத்துவ காரணங்களை சுட்டிக்காட்டி குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு தங்களுக்கு மேல் உள்ள நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தில் நிவாரணம் கோரலாம் என நீதிபதி ஜெயசந்திரன் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து, மேல் முறையீட்டு 30 நாள்கள் அவகாசமும், அவகாசம் முடிந்ததும் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார். 

இதை தொடர்ந்து, பொன்முடி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் ஜனவரி மாதம் 12ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், பொன்முடி மற்றும் அவருடைய மனைவி நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டது. அதாவது, பொன்முடி நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு மட்டுமே அப்போது இடைக்கால தடை விதிக்கப்பட்டது. 

எம்எல்ஏவாக தொடர வாய்ப்பு

இந்நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடவே, அவர்களின் மூன்றாண்டு சிறை தண்டனையையும் நிறுத்தி வைத்துள்ளது. மேலும், பொன்முடி எம்எல்ஏவாக தொடரவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

சட்டப்பேரவை செயலகம் விளக்கம்!

சில நாள்களுக்கு முன் பொன்முடி வெற்றி பெற்ற திருக்கோவிலூர் தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதிய நிலையில், தற்போதைய இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பொன்முடி மீண்டும் தேர்தலில் நின்று வெற்றி பெற வேண்டுமா அல்லது எம்எல்ஏவாகவே தொடரலாமா என்ற கேள்வி எழுந்தது. 

இதுகுறித்து சட்டப்பேரவை செயலகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதில்,"ஊழல் தடுப்பு வழக்கில் இது போன்ற ஒரு நிலை முதன் முறையாக உருவாக்கி உள்ளது. தனக்கு எதிரான தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தான் குற்றமற்றவர் என்றிருப்பதால் தனது எம்எல்ஏ பதவியை மீட்டு தருவதற்கு தமிழக சட்டசபை செயலகத்தை அணுகலாம் அல்லது இதே கோரிக்கை வைத்து நீதிமன்றத்தின் உதவியை நாடலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி... மூன்று நாள் சுற்றுப்பயணம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News