BREAKING: செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் ஐ.டி ரெய்டு!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை. சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை.  

Written by - RK Spark | Last Updated : May 26, 2023, 02:43 PM IST
BREAKING: செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் ஐ.டி ரெய்டு! title=

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை. சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.  மேலும் கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.  இந்த திடீர் சோதனையால் திமுகவினர் கலக்கத்தில் உள்ளனர்.  அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சமீபத்தில் அடுக்கடுக்காக புகார்கள் வந்தது.  டாஸ்மாக்கில் கூடுதல் பணம் வசூலிப்பதாகவும், பார் டெண்டர் முறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் தொடர்ந்து புகார்கள் வந்தது.  இந்நிலையில் தற்போது ஐடி ரெய்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | விஷசாராய விவகாரத்தில் அடுத்தடுத்து திருப்பம்..விசாரணையை துரிதப்படுத்தும் சிபிசிஐடி போலீஸார்!

இந்நிலையில் ரெய்டு குறித்து தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " போர்க்களத்தில் குதிரைப்படை,  காலப்படை ஆகியவற்றை எப்படி வைத்திருப்பார்களோ அதைப் போல ஒன்றிய பாஜக அரசு சிபிஐ, ஐடி போன்ற துறைகளை வைத்திருக்கிறார்கள். கர்நாடக தேர்தலில் ரோட் ஷோ நடத்தி என்னென்னமோ நாடகம் ஆடியும் , பணத்தை குவித்தும் பார்த்தார்கள். தோல்வி அடைந்தார்கள்.

பாஜகவினர் தான் கர்நாடக தேர்தலில் 2000 ரூ நோட்களை அதிகம் பயன்படுத்தினார்கள். 2024 தேர்தலில்  Man of The match ஆக Mkstalin தான் இருப்பார். முதலீடுகளை ஈர்க்க எங்கள் முதல்வர் வெளிநாடு சென்றுள்ள நேரத்தில் அதுகுறித்து பத்திரிக்கையில் தினமும் செய்தி வருவதை திசை திருப்பும் நோக்கில் இன்று ரெய்டு நடத்துகிறார்கள். 

முதலமைச்சர் இல்லாத நேரத்தில் வேண்டுமென்றே இந்த ரெய்டு நடத்தப்படுகிறது. இன்றல்ல பல ரெய்டுகளை பார்த்து.. முறியடித்து வளர்ந்தவர்கள் நாங்கள். கர்நாடக தேர்தலில் தோல்வியடைந்ததற்கு பின்  அண்ணாமலை சொன்னார். பாஜகவில் பலத்தை காட்டுவோம் என்று. அண்ணாமலை திட்டமிட்டு செந்தில் பாலாஜியை டார்கெட் செய்கிறார். இது பாஜகவின் கேவலமான அரசியல். ரெய்டுக்கு மாநில காவல்துறையை அழைத்துச் செல்வது தான் வழக்கம். ஆனால் திட்டமிட்டு மாநில அழைத்துச் செல்லாமல் செல்கிறார்கள். திடீரென யாரோ ஒருவர் வந்து ஐடி ரெய்ட் என்று சொன்னால் திருடனா,  கொள்ளைக்காரனா என்று யாருக்குத் தெரியும். பாதுகாப்பிற்காக எதாவது தடுத்திருப்பார்கள். எனக்கு தெரிந்தவுடன் திமுகவினர் யாரும் அங்கு பிரச்சனை செய்யக் கூடாது என செந்தில் பாலாஜிடம் தெரிவித்தேன். 

ரெய்டுக்கு வந்தவர்களின் வாகனங்களை உடைத்தது தவறு தான். நான் சரியென்று சொல்லவில்லை. யார் என்னவென்று தெரியாமல் அச்சத்தில் செய்திருக்கிறார்கள். திமுகவினர் இந்த செயலை செய்திருந்தாலும் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணாமலை என்ன அமலாக்கத்துறைக்கோ, சிபிஐக்கோ இயக்குநரா? யார் அண்ணாமலை?  அவர் சொல்லி ஏன் ரெய்டு நடத்துகிறார்கள் என்று தான் கேட்கிறோம்." 
என்றார். 

மேலும் படிக்க | நாடாளுமன்ற வளாகத்தில் தமிழரின் செங்கோல்! அப்படி என்ன சிறப்பு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News