தமிழக சட்டமன்றத்தின் இன்றைய கூட்டத்தொடரில், எம்.எல்.ஏ -களின் ஊதிய உயர்வு மசோதா தாக்கல் செய்யப்பட்டது, இந்த மசோதாவிற்கு எதிர்பு தெரிவித்து திமுக-வினர் வெளி நடப்பு செய்தனர். சுயேட்சை எம்.எல்.ஏ டிடிவி.தினகரனும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மேலும் சட்டப்பேரவையில் பேசவிடாமல் தடுக்கின்றனர் எனக் கூறி வெளிநடப்பு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- எம்எல்ஏக்களை தக்க வைத்துக் கொள்ள தான் ஊதிய உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கான மசோதாவை தாக்கல் செய்துள்ளது. நாட்டில் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், எம்.எல்.ஏ -களின் ஊதிய உயர்வு மசோதா தரப்[தற்போது எதற்கு என்பது தான் என் கேள்வி? மேலும் தம் மீதான விமர்சனத்துக்கு பதில் அளிக்க சட்டப்பேரவையில் அனுமதி மறுக்கப்பட்டது.
முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பி.எஸ். இருவரும் சிறந்த நடிகர்கள். அம்மாவுக்கு துரோகம் செய்தவர்கள். ஆர்.கே.நகரில் அதிமுக தோல்வி அடைய காரணம் வேட்பாளராக மதுசூதனன் நிறுத்தப்பட்டதால் தான்.
எம்.எல்.ஏ.க்களின் ஊதிய உயர்வு தேவையற்றது எனவும் டிடிவி.தினகரன் பேட்டியளித்துள்ளார்.