பி.இ. படிப்புக்கான 'தரவரிசை பட்டியல்' அண்ணா பல்கலையில் வெளியீடு!

பி.இ. படிப்புக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டுள்ள நிலையில் அண்ணா பல்கலையில் தரவரிசை பட்டியலை இன்று உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்!  

Last Updated : Jun 28, 2018, 10:10 AM IST
பி.இ. படிப்புக்கான 'தரவரிசை பட்டியல்' அண்ணா பல்கலையில் வெளியீடு! title=

பி.இ. படிப்புக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டுள்ள நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கையின் இந்த கல்வியாண்டுக்கான (2018-19) தரவரிசை பட்டியலை, இன்று  அண்ணா பல்கலைக்கழகத்தின் அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்.

இதில்,பொறியியல் பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்த 1,59, 631 பேரில் 1,04, 453 பேருக்கு தரவரிசை பட்டியலில் 1,76,875 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.மற்றும் இந்த தரவரிசைப்பட்டியலில் முதல் 10 பேர் 200க்கு 200-மதிப்பெண் பெற்றுள்ளனர். மற்ற 5,397 மாணவர்களின் விண்ணப்பங்கள் தேர்வாகவில்லை. அதில், கீர்த்தனா ரவி முதலிடத்தை பெற்றார். ரித்வீக், ஸ்ரீ வர்ஷினி ஆகியோர் முறையே 2 மற்றும் 3ஆவது இடத்தை பெற்றுள்ளனர். 

மேலும், மேளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் ஏதேனும்தவறு இருந்தால் திருத்திக் கொள்ள ஒரு வார கால அவகாசம் அளிக்கப்படுகிறது. 

Trending News