திருநெல்வேலி: திருநெல்வேலியில் (Tirunelveli) உள்ள மாவட்ட நுகர்வோர் குறைகள் தீர்க்கும் மன்றம், நுகர்வோர் சேவை குறைபாட்டிற்காக, ஒரு தனியார் துறை வங்கிக்கு ரூ .20,000 அபராதம் விதித்துள்ளது. நுகர்வோருக்கு ஏர் கண்டிஷனிங் வசதியை வழங்கத் தவறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது.
46 வயதான ஏ பிரம்மநாயகத்திற்கு, இழப்பீடாக ரூ .15,000 செலுத்துமாறும், வழக்கை போராடுவதற்கான செலவினங்களுக்காக 5,000 ரூபாய் செலுத்துமாறும் மன்றம் வங்கிக்கு (Bank) அறிவுறுத்தியுள்ளது.
IDBI வங்கியின் திருநெல்வேலி கிளை வங்கியில் நுகர்வோருக்கு ஏர் கண்டிஷனிங் வசதியை உறுதி செய்துள்ளதாகவும், தான் அங்கு ஒரு சேமிப்பு வங்கி கணக்கைத் திறக்க இது ஒரு காரணியாக இருந்தது என்றும் நுகர்வோர் ஆர்வலர் மனுதாரர் பிரம்மநாயகம் தெரிவித்தார்.
மையப்படுத்தப்பட்ட ஏசி சில வாரங்களாக செயலிழந்துவிட்டிருந்ததால், அவர் ஜூன் 21, 2019 அன்று வங்கியில் டிமாண்ட் ட்ராஃப்டைப் பெற 30 நிமிடங்கள் காத்திருந்த போது பல கஷ்டங்களை எதிர்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
மூடப்பட்ட ஜன்னல்கள் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேசமயம் பெடஸ்டல் ஃபேன்கள் வங்கி ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. தனது மனுவில், அந்த நபர், இந்த பிரச்சனை குறித்து மேலதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளதாக வங்கி மேலாளர் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் ரூ .4.5 லட்சம் செலவாகும் என்பதால் பழுதடைந்த ஏசி மாற்றப்படவில்லை.
ஜூலை 12, 2019 அன்று, அந்த வாடிக்கையாளர் மீண்டும் பணத்தை டெபாசிட் செய்ய வங்கிக்குச் சென்றார். ஆனால் ஏ.சி அப்போதும் சரியாகாமல் இருந்தது. மும்பையில் உள்ள ஒரு மூத்த வங்கி அதிகாரியுடன் தொலைபேசியில் பேசினார். ஏசி சேவை வழங்குநருக்கு புதிய ஒன்றை நிறுவ ஒரு மாதம் ஆகும் என்று அந்த அதிகாரி கூறினார்.
ALSO READ: வாடிக்கையாளரிடம் 10 ரூபாய் அதிகமாக வசூலித்ததால் ரூ. 2 லட்சம் அபராதம் விதிப்பு
திருநெல்வேலியில் மேலாளரும், மும்பையில் உள்ள அவரது உயர் அதிகாரிகளும் அவரை அவமானப்படுத்தியதாகவும், அவரது குறைகளைத் தீர்க்கவில்லை என்றும் குற்றம் சாட்டிய அந்த நபர், மாவட்ட நுகர்வோர் குறைகளைத் தீர்க்கும் மன்றத்தை அணுகினார். மேலும் அந்த தேதிகளில் வங்கியில் தனது பரிவர்த்தனைக்கான ரசீதுகள், பணிபுரியாத ஒரு மின் விசிறியின் வீடியோ, ஏசி தொடர்பாக தான் வங்கி மேலாளருக்கு அளித்த புகாரின் நகல் ஆகியவற்றுடன் அவர் மாவட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றத்தை அணுகினார்.
எதிர் தரப்பு, சம்மன் பெற்று தங்கள் விளக்கத்தை அளிக்காததால், மன்றத் தலைவர் தேவதாஸ் மற்றும் உறுப்பினர்கள் சிவமூர்த்தி மற்றும் முத்துலட்சுமி ஆகியோர் புதன்கிழமை வங்கி வாடிக்கையாளரான பிரம்மநாயகத்திற்கு ஆதரவாக உத்தரவை நிறைவேற்றினர். வங்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாதத்திற்குள் அபராதம் (Fine) செலுத்த வங்கி தவறினால், வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்கப்படும் வரை அது 6% வட்டியை அளிக்க வேண்டியிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.