மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் தைப்பொங்கல் விழாவையொட்டி உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், போட்டி தொடங்குவதற்கு முன்பாக மாடுபிடிவீரர்களுக்கு ஊக்கமருந்து மற்றும் மது அருந்தியுள்ளனரா என்ற பரிசோதனையும் உடற்பரிசோதனையும் நடத்தப்பட்டு டீசர்ட் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து காளைக்கும் மருத்துவபரிசோதனை செய்யப்பட்டரே அனுமதிக்கப்பட்டது. வாடிவாசலில் இருந்து கலெக்சன் பாயிண்டுக்கு செல்லும் காளைகளுக்கு மீண்டுமொரு மருத்துவபரிசோதனை இந்த ஆண்டு செய்யப்பட்டது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின்போது வாடிவாசல் அருகே இருக்கக்கூடிய வீடுகளில் வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் அவரது உறவினர்கள் தவிர வேறு ஏதேனும் பார்வையாளர்கள் அனுமதிக்க கூடாது எனவும் அனுமதித்து சட்ட ஒழுங்கு ஏற்பட்டால் வீட்டின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க | முடிஞ்சா என்ன அடக்கி பார்! ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்திற்குள் வந்த நாய்!
இதேபோன்று போட்டியில் கலந்து கொள்ளக்கூடிய மாடுபிடி வீரர்கள் மற்றும் காளையின் உரிமையாளர்கள் போட்டியின் உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் மது அருந்திவிட்டு வந்தால் உடனடியாக போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் போட்டியின்போது ஏதேனும் சண்டையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் போட்டியில் கலந்து கொள்ளக்கூடிய காளையின் உரிமையாளர்கள் மூக்கணாங்கயிற்றை அவிழ்ப்பதற்காக கையில் கத்தியோ, அரிவாளோ எடுத்து வரக்கூடாது எனவும் காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு அவனியாபுரம் போட்டி நடைபெறக்கூடிய வில்லாபுரம், அவனியாபுரம், முத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பத்துக்கு மேற்பட்ட அரசு மதுபான கடை மற்றும் மன மகிழ் மன்றங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோன்று பாதுகாப்பு நலன் கருதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறக்கூடிய பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு அவனியாபுரம் மற்றும் திருப்பரங்குன்றம் சாலை, விமான நிலையத்திற்கு செல்லக்கூடிய சாலை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்பட உள்ளன.
போட்டியின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபடக்கூடிய காவல்துறையினர் உரிய பாதுகாப்பு கவசங்களை பொருத்தி பணியாற்ற வேண்டுமென மாநகர காவல் துறையை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது போட்டி நடைபெறக்கூடிய பகுதிகளில் உள்ள மரங்களின் மீது பார்வையாளர்கள் ஏறி போட்டி பார்ப்பதை தடுக்கும் விதமாக மரங்களில் இரும்பு கம்பிகள் சுற்றப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. மேலும் போட்டி நடைபெறக் கூடிய பகுதிகளில் பாதுகாப்பை மீறி போட்டியை பார்வையிட வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின்போது கண்காணிப்பில் உள்ள தொடர் கடும் குற்ற வழக்குகள் பின்னணி உள்ள நபர்களின் பெயரில் காளைகளை அவிழ்க்க கூடாது எனவும் இதனை காவல்துறையினர் முறையாக கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என காவல்துறை சார்பில் ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Pongal Gift: 1000 ரூபாயை பெற இன்றே கடைசி நாள்... பொங்கலுக்கு பின்னரும் கிடைக்குமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ