தமிழ் பெண்ணை மணக்கும் மேக்ஸ்வேல்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் தமிழகத்தை பூர்வீகமாகக்கொண்ட ஆஸ்திரேலிய வாழ் தமிழ்பெண்ணை திருமணம் செய்ய உள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 12, 2022, 10:33 PM IST
  • தமிழ்நாட்டு மாப்பிள்ளையாகும் மேக்ஸ்வெல்
  • சென்னை பெண்ணை மணக்கிறார்
  • நிச்சயதார்த்த புகைப்படம் இணையத்தில் வைரல்
தமிழ் பெண்ணை மணக்கும் மேக்ஸ்வேல் title=

ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல், விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக கடந்த சில மாதங்களாக தகவல் வெளியானது. வினி ராமன் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இருவரும் ஜோடியாக பல்வேறு இடங்களுக்கு சென்ற புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வினி ராமன் பதிவிட்டார். அப்போது, மேக்ஸ்வெல்லின் காதலி இவர் என்றும் அரசல்புரசலாக பேசப்பட்டது.

மேலும் படிக்க | CSK -வில் தமிழக வீரர்களுக்கு இடமில்லையா?

இந்நிலையில், அண்மையில் தங்களின் காதலை உறுதிபடுத்திய இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள உள்ளனர். மூன்று ஆண்டு காதல் விரைவில் திருமணத்தில் அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில், மேக்ஸ்வெல் மற்றும் வினிராமன் ஆகியோர் பெற்றோருடன் இருக்கும் புகைப்படமும், அவர்களின் திருமணத்துக்காக தமிழில் அச்சிடப்பட்ட புகைப்படமும் இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேக்ஸ்வெல்லின் காதலி வினி ரமணியின் குடும்பம் சென்னையை பூர்வீகமாக கொண்டது. மேற்கு மாம்பலத்தை சேர்ந்த வினி ராமன் குடும்பம் மெல்பேர்னில் வசிக்கின்றனர். வினி ராமன் மருத்துவராக பணியாற்றுவதாக கூறப்படுகிறது. மேக்ஸ்வெல்லுகும், வினி ராமனுக்கும் நிச்சயதார்த்தம் நிறைவடைந்துள்ளது. இணையத்தில் வெளியாகியிருக்கும் அந்த பகைப்படத்தில் இருவரும் ஜோடியாக இருக்கின்றனர். ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் விரைவில் தமிழ்நாட்டு மாப்பிள்ளையாக போவதற்கு, ரசிகர்கள் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | ஃபாஃப் டு பிளெசிஸை எடுத்த ஆர்.சி.பி! ஏலத்தில் விட்டுக்கொடுத்த சி.எஸ்.கே!  

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News