சொத்து குவிப்பு வழக்கு - மேல்முறையீடு செய்த எஸ்.பி.வேலுமணி

தனக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 21, 2022, 08:51 PM IST
  • எஸ்.பி வேலுமணி மீது சொத்துக்குவிப்பு வழக்கு
  • வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு
  • தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
 சொத்து குவிப்பு வழக்கு - மேல்முறையீடு செய்த எஸ்.பி.வேலுமணி title=

அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில், டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி.பொன்னி ஆரம்பகட்ட விசாரணை நடத்தி தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கை கைவிடுவது என அரசு முடிவு செய்தது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக டெண்டர் முறைகேடு தொடர்பாகவும், வருமானத்துக்கு அதிகமாக 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகவும் குற்றஞ்சாட்டி இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. 

அதேசமயம், அவருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது. இதையடுத்து எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தது.

மேலும் படிக்க | பழனி கோயில் குடமுழுக்கு... தமிழில் நடக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

இதனைத் தொடர்ந்து, சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என்ற உயர் நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | உனக்கு தைரியம் இருக்கா?... எடப்பாடியை ஒருமையில் விமர்சித்த ஓபிஎஸ்

மேலும் படிக்க | வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News