நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் வருகின்ற நவம்பர் 17 ஆம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து 26 ஆம் தேதி அதிகாலை திருக்கோவில் கருவறையினுள் 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை 6 மணி அளவில் திருக்கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற விழாவில் ஒன்றாக கருதக்கூடிய அருணாசலேஸ்வரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ளது. தீபத் திருவிழாவிற்காக பல்வேறு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், திருக்கோவில் சார்பில் திருக்கோவிலில் உள்ள ராஜ கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம், பே கோபுரம் உள்ளிட்ட 9 கோபுரங்களுக்கும் வண்ண விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று முடிந்தது.
அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் உள்ள 9 கோபுரங்களும் அமாவாசை தினமான இன்று மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு 9 கோபுரங்களும் மின்னொளியில் ஜொலிக்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. இரவு நேரங்களில் மின்னொளியில் நவ கோபுரங்களும் காட்சி அளித்து வருவது பக்தர்கள் மனதை மெய்சிலிர்க்க வைக்கிறது, இதனைத் தொடர்ந்து வருகின்ற 14 ஆம் தேதி நகர காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் திருக்கார்த்திகை தீபத் திருவிழா தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பைக்குக்கும் பெயில் போடுகிறேன் என டிடிஎஃப் வாசன் ஆவேசம்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ