சென்னை: ஜனவரி 8 ஆம் தேதி காளியக்கவிலை அருகே சிறப்பு துணை இன்ஸ்பெக்டர் வில்சனை ஒரு சோதனைச் சாவடியில் சுட்டுக் கொன்றது தொடர்பான வழக்கில், அவரை கொலை செய்ய மூளையாக செயல்பட்ட மெஹபூப் பாஷாவை பெங்களூருவில் போலீசார் கைது செய்தனர். அதேபோல கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14), இந்த கொலை தொடர்பாக இரு சந்தேக நபர்களான திருவிதாங்கோடு அப்துல் சமீம், இளங்களைட தௌபீக் இருவரையும் கர்நாடகாவின் உடுப்பியில் கைது செய்யப்பட்டனர். இருவரையும் குழித்துறை (Kuzhithurai) நீதித்துறை மாஜிஸ்திரேட் II ஜெயசங்கர் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர்களை திங்கள்கிழமை (ஜனவரி 20) வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் பாலயம்கோட்டை (Palayamkottai) மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த கொலை சம்பந்தமாக தொடர்ந்து விசாரணை செய்து வந்த போலீசார் தடைசெய்யப்பட்ட அல் உம்மா அமைப்பை சேர்ந்த மன்சூர், ஜெபிபுல்லா, அஜ்மத்துல்லா ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) சிறப்பு துணை இன்ஸ்பெக்டர் வில்சனை கொலைக்கு மூளையாக செயல்பட்ட மெஹபூப் பாஷாவை பெங்களூருவில் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.