கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்டம் தோறும் கண்காணிப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் எத்தனை கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது என்பதையும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளையும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.,
கொரோனாவை (Coronavirus) கட்டுப்படுத்த மாவட்டம் தோறும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை கண்காணிக்க 36 மாவட்டங்களுக்கு மூத்த IAS அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் உடனடியாக அந்தந்த மாவட்ட கலெக்டர்களுடன் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தினசரி எத்தனை பேர் இந்த கொரோனா வைரசால் பாதிக்கப்படுகின்றனர், எத்தனை பேருக்கு கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) போடப்படுகிறது, எத்தனை கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது என்பதை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ALSO READ | திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி
மேலும் கொரோனா தடுப்பு உபகரணங்களான முககவசம், கொரோனா பரிசோதனை கருவி, கொரோனா கவச உடை போன்றவை இருப்பு உள்ளதா என்பதையும் சரிபார்க்க வேண்டும். அதே சமயம், கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனைகள் முறையாக விதிமுறைகள்படி செயல்படுகிறத என்பதையும் அவர்கள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 4 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. புதன்கிழமை நிலவரம் படி 3,986 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 17 பேர் உயிரிழந்துவிட்டனர். மாநிலம் முழுவதும் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 27 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. வரும் நாள்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR