இன்றைய நவீன உலகில் எலக்ட்ரானிக்ஸ் கருவிகளின் கண்டு பிடிப்புகள், மனிதனின் பல்வேறு தேவைகளுக்கு இன்றியமையாததாக உள்ளது. அவ்வாறு பிரபலமான ஆப்பிள் நிறுவனம் தற்போது கண்டுபிடித்துள்ள "விஷன் ப்ரோ மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்டை" கொண்டு கோவை தனியார் ஜெம் மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை எளிதாக்கியும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அறுவை சிகிச்சை நடைபெற்றாலும் மருத்துவர்கள் அதனை கானும் வகையில் கண்டு பிடித்து பிரமிக்க வைத்துள்ளனர்.
அறுவை சிகிச்சையை எளிதாக்கியும் உலகின் எந்த மூலையில் இருந்தும் அறுவை சிகிச்சை நடைபெற்றாலும், மருத்துவர்கள் அதனை கானும் வகையிலான கண்டுபிடிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் இந்த கருவி இன்னமும் அறிமுகப்படுத்தப்படாத நிலையில், நவீன தொழில்நுட்ப கருவியின் செயல்பாடுகளை கொண்டு மருத்துவதுறையை மேம்படுத்த முடியுமா என்று சோதனை செய்த ஜெம் மருத்துவமனை மருத்துவர்கள் அதில் வெற்றி அடைந்துள்ளனர்
இக்கருவியின் செயல்பாடுகள் குறித்து ஜெம் மருத்துவமனை செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது. அந்தக் கூட்டத்தில் பேசியிஅ ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பழனிவேலு மற்றும் ஜெம் மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி பிரவீன் ராஜ் குடலியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பார்த்தசாரதி ஆகியோர் கருவி குறித்து விளக்கமாக பேசினார்கள்.
மேலும் படிக்க | ருசியா சாப்பிட்டுகிட்டே அழகாகலாம்! நோய்களுக்கு குட்பை சொல்லும் வெந்தயக்கீரை!
ஆப்பிள் விஷன் ப்ரோ மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்டை வடிவமைத்த ஆப்பிள் நிறுவனம் திரைப்படங்களை நம் கண் முன் காட்டும் வகையில் வடிவமைத்திருந்தது. இக்கருவியின் செயல்பாடுகளை கொண்டு மருத்துவதுறையை மேம்படுத்த முடியுமா என்று சோதனை செய்த ஜெம் மருத்துவமனை மருத்துவர்கள் அதில் வெற்றி அடைந்தது மருத்துவத்துறையில் புதிய புரட்சியாக இருக்கும்.
அறுவைசிகிச்சையின் பொழுது மருத்துவர்களுக்கு பல்வேறு இடையூறுகள் இருந்தது. லேப்ராஸ்கோபிக் மானிட்டரை அடிக்கடி பார்த்து, பார்த்து வயிறு, ஹெர்னியா, குடலிரக்கம், உள்ளிட்ட அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியநிலை இருந்து வந்தது. இதனால் மருத்துவர்களுக்கு கால விரயம் ஏற்படும்.
தற்போது இந்த கருவி மூலமாக நாம் எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் 4கே கிளாரிட்டியுடன் துள்ளியமாக கணித்து அறுவை சிகிச்சையின் கால நேரத்தை குறைப்பதுடன் மிக துள்ளியமாக அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடிகிறது, இக்கருவி மருத்துவதுறையில் நாங்கள் எதிர்பார்த்ததை விட ஒரு புரட்சியை ஏற்படுத்தும் வகையில் பிரமிப்பை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்திய நாட்டு மதிப்பீட்டில் 4"லட்ச ரூபாய் கொண்ட இக்கருவி மூலமாக இச்சாதனையை படைத்த ஜெம் மருத்துவமனையின் மருத்துவர்களை ஆப்பிள் நிறுவனமே வியந்து பார்ப்பதாக மருத்துவர்கள், செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.
மேலும் படிக்க | கவனச்சிதறல் ஏற்படாமல் இருக்க..‘இந்த’ 7 யோகாசனங்களை செய்யுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ