பதட்டம்: இந்து முன்னணி பிரமுகர் வெட்டி கொலை

Last Updated : Sep 23, 2016, 03:32 PM IST
பதட்டம்: இந்து முன்னணி பிரமுகர் வெட்டி கொலை title=

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் (வயது 35) என்பவரை மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அரிவாளால் வெட்டினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த சசிகுமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

தகவல் அறிந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே இந்து முன்னணி மற்றும் பாரதீயஜனதா வினர் ஆஸ்பத்திரியில் திரண்டனர். இதனால் அங்கு பதட்டம் நிலவியது. உடனடியாக அங்கு பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

பின்னர் சசிகுமார் உடல் பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சசிகுமார் கொலை தொடர்பாக இந்து முன்னணி சார்பில் இன்று மாநிலம் தழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கோவை மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. 

கோவையில் பஸ்கள் குறைந்த அளவே இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

Trending News