அனிதா மரணம்: மருத்துவக்கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

Last Updated : Sep 9, 2017, 12:27 PM IST
அனிதா மரணம்: மருத்துவக்கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ் title=

அனிதா மரணத்திற்கு நீதிகேட்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களின் போராட்டம் வாபஸ் பெற்றனர்.

அனிதா மரணத்திற்கு நீதிகேட்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களின் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்ற திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் சி.பி.ஐ. மூத்தத் தலைவர் நல்லக்கண்ணு ஆகியோர் மாணவர்களை சந்தித்து பேசினார்கள். 

அனிதா மரணத்திற்கு நீதிகேட்டு கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து வந்த உண்ணாவிரத போராட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் மாணவர்களுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். இதன்மூலம் மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

Trending News