மாநிலங்களவை தேர்தலில் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் போட்டி!

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது!

Last Updated : Jul 6, 2019, 06:37 PM IST
மாநிலங்களவை தேர்தலில் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் போட்டி! title=

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது!

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. தி.மு.க வேட்பாளர்களாக வழக்கறிஞர் வில்சன் மற்றும் தொ.மு.ச சண்முகம் ஆகியோரும், தி.மு.க கூட்டணி சார்பில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவும் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியிடுகின்றனர்.

அதேவேளையில் அதிமுக சார்பில் 2 வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியான பாமக-வுக்கு அளிக்கப்பட்ட ஒரு இடத்திற்கான வேட்பாளர் பெயர் இன்று வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையே, கட்சியின் சீனியர்களான தம்பிதுரை, தளவாய் சுந்தரம், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், அன்வர் ராஜா, தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோரும் ராஜ்யசபா சீட்டுக்காக காய்நகர்த்திக் கொண்டிருந்தனர்.

ஒரு சீட்டை பாமக-வுக்குக் கொடுத்துவிட்டதால் மீதமிருக்கும் 2 சீட்களைக் கொண்டு சீனியர்களை திருப்திப்படுத்துவது கடினம் என்பதை உணர்ந்த கட்சி தலைமை உள்ளூர் நிர்வாகிகளுக்கே சீட் தர முடிவு செய்தனர்.

இதையடுத்து, அதிமுக சார்பில் முகமது ஜான் மற்றும் சந்திரசேகரன் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவர் என அறிவிப்பு வெளியானது. சிறுபான்மையினருக்கு மாநிலங்களவையில் இடம் கண்டிப்பாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் முகமது ஜானுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. மற்றொரு வேட்பாளரானா சந்திரசேகரன் மேட்டூர் நகர அதிமுக செயலாளராக இருக்கிறார். 

இதனையடுத்து மீதம் உள்ள பாமக சார்பு வேட்பாளர் பெயர் மட்டும் வெளியாகமல் இருந்தது. இந்நிலையில் தற்போது பாமக சார்பில் மாநிலங்களை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News