ஊழல்வாதிகளுக்கு இடம் கொடுத்து ஊழல் கூட்டணி அமைத்துள்ளது எதிர்கட்சிகள்: அமித் ஷா தாக்கு

கனிமொழி, ஆ.ராசா, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட வேட்பாளர்களை நிறுத்தி ஊழல் கூட்டணியை எதிர்கட்சிகள் அமைத்துள்ளது என பாஜகவின் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 2, 2019, 04:45 PM IST
ஊழல்வாதிகளுக்கு இடம் கொடுத்து ஊழல் கூட்டணி அமைத்துள்ளது எதிர்கட்சிகள்: அமித் ஷா தாக்கு title=

தமிழகத்தில் இன்று மூன்று இடங்களில் நடைபெறும் தேர்தல் பிரசாரத்தில் பாஜக வேட்பாளார்கள் தமிழிசை சவுந்தரராஜனை, எச்.ராஜா மற்றும் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிபில் ஈடுபட்டு வருகிறார் பாஜகவின் தலைவர் அமித் ஷா.

முதலில் தூத்துக்குடி வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து சங்கரப்பேரியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பாஜகவின் தலைவர் அமித் ஷா பேசினார். அவர் கூறியதாவது,

அதிமுக, பாமக, தேமுதிக என வலிமையான கட்சிகள் இணைந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த இருவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளித்து அவர்களை பாஜக பெருமைப்படுத்தியுள்ளது. எங்கள் கூட்டணி பெரும் வெற்றி அடையும். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெற வையுங்கள்.

14வது நிதிக்குழு மூலம் தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் வருங்காலங்களில் நிதியுதவி மேலும் அதிகரிக்கப்படும் என்று உறுதியளித்தார். தமிழகத்திற்கு புதிய வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வருவோம்.

கனிமொழி, ஆ.ராசா, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட வேட்பாளர்களை நிறுத்தி ஊழல் கூட்டணியை எதிர்கட்சிகள் அமைத்துள்ளது. 

Trending News