நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற சிறுமி மேற்கொண்ட வேற லெவல் முயற்சி: குவியும் பாராட்டுகள்

Tamil Nadu: ஏரி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒரு சிறுமி மேற்கொண்டுள்ள பணி பலரது கவனத்தை கவர்ந்துள்ளது!!

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 3, 2022, 04:05 PM IST
  • ஏரி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற சிறுமியின் முயற்சி.
  • சைக்கிள் பேரணி சென்று மனு அளித்தார்.
  • அடுத்த கட்ட பயணமாக தமிழ்நாடு முதலமைச்சரை நோக்கி சைக்கிள் பயணம் மேற்கொள்வேன் என அவர் தெரிவித்துள்ளார்.
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற சிறுமி மேற்கொண்ட வேற லெவல் முயற்சி: குவியும் பாராட்டுகள் title=

ஏரி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒரு சிறுமி மேற்கொண்டுள்ள பணி பலரது கவனத்தை கவர்ந்துள்ளது. ஏரி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயின் மகள் இரண்டு ஆண்டுகளாக பல்வேறு புகார்களை அளித்தும் மாவட்ட நிர்வாகம் மற்றும் கலத்தம்பட்டு பஞ்சாயத்து நிர்வாகம் ஆகியவை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், செஞ்சி அருகே நீர்நிலை ஆக்கிரமிப்புகளை மீட்டு எடுக்க ஏழாம் வகுப்பு மாணவி செம்மொழி சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தவறினால், அடுத்த கட்ட பயணமாக தமிழ்நாடு முதலமைச்சரை நோக்கி சைக்கிள் பயணம் மேற்கொள்வேன் என அவர் தெரிவித்துள்ளார். 

நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்து ஏழாம் வகுப்பு மாணவியின் இந்த செயல் கவனத்தை ஈர்த்துள்ளது. அவரின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர். 

Villupuram: School Girl takes this different step to stop Encroachment of Lakes

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டத்திற்கு உட்பட்ட கலத்தம்பட்டு பஞ்சாயத்திற்கு உட்பட்ட அன்னபள்ளம் கிராமத்தில் ஏரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத மேல்மலையனூர்  வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களை கண்டித்தும், அவர்களது மெத்தனத்தை மற்றவர்கள் அறியும்படி செய்யவும் அன்னபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த புவனேஸ்வர் என்ற விவசாயின் மகள் ஏழாம் வகுப்பு மாணவி செம்மொழி முடிவு செய்தார்.

மேலும் படிக்க | விஞ்ஞான ஊழலெல்லாம் திமுகவுக்கு கை வந்த கலை - ஜெயக்குமார் விமர்சனம்

அப்பகுதியில் உள்ள ஏரி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 2020 ஆம் ஆண்டு மற்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவும் பல்வேறு புகார் மனுக்களை கொடுத்தும் மாவட்ட நிர்வாகம் மற்றும் கலத்தம்பட்டு பஞ்சாயத்து நிர்வாகம் என யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை எனக் கூறப்படுகிறது. 

இந்த காரணத்தினால் செஞ்சி அன்னபள்ளம் கிராமத்தில் உள்ள ஏரியில் இருந்து செஞ்சி வழியாக விழுப்புரம் வரை 60 கிலோமீட்டருக்கு ஏழாம் வகுப்பு மாணவி செம்மொழி சைக்கிள் பேரணி மேற்கொண்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனை சந்தித்து ஏரி ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கவும் ஏரியை மீட்டுத்தர வேண்டும் எனவும் மனு அளித்தார்.

முன்னதாக, காலையில் ஆறு மணிக்கு புறப்பட்ட மாணவி சைக்கிள் பயணம் மெற்கொண்டு சுமார் 4 மணி நேரத்தில் விழுப்புரம் சென்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் மனு அளித்தார். 

Villupuram: School Girl takes this different step to stop Encroachment of Lakes

மேலும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்தகட்ட பயணமாக செஞ்சியில் இருந்து ஏழாம் வகுப்பு மாணவி செம்மொழி சைக்கிள் மூலம் பேரணியாக சென்று முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து நீர்நிலை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க மனு கொடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க | அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்ற மனு தாக்கல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News