அமர் பிரசாத் ரெட்டி மேலும் ஒரு வழக்கில் கைது - குண்டாஸ் பாய வாய்ப்பு?

செஸ் ஒலிம்பியாட் தொடரின்போது முதல்வர் படத்தை அகற்றிவிட்டு பிரதமர் படத்தை வைத்த வழக்கில் அமர் பிரசாத் ரெட்டி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 26, 2023, 05:35 PM IST
  • அமர் பிரசாத் ரெட்டி மீண்டும் கைது
  • செஸ் ஒலிம்பியாட் போஸ்டர் சேதப்படுத்திய வழக்கு
  • ஏற்கனவே நீதிமன்ற காவலில் உள்ளார்
அமர் பிரசாத் ரெட்டி மேலும் ஒரு வழக்கில் கைது - குண்டாஸ் பாய வாய்ப்பு? title=

பாஜகவைச் சேர்ந்த அமர்பிரசாத் ரெட்டி, அண்ணாமலை வீட்டின் முன்பு அனுமதியின்றி கொடிக்கம்பம் வைத்த வழக்கில் இப்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவரை கோட்டூர்புரம் காவல்துறையினர் மீண்டும் ஒரு வழக்கில் கைது செய்துள்ளனர். செஸ் ஒலிம்பியாட் தொடரின்போது முதல்வர் படத்தை அகற்றிவிட்டு பிரதமர் படத்தை வைத்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அமர்பிரசாத் ரெட்டி மீது மேலும் பல வழக்குகள் பதிவு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமான வட்டாரங்களில் இருக்கும் அமர்பிரசாத் ரெட்டி திமுக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். ஆனால் அவையெல்லாம் விமர்சனங்கள் அல்ல, வெற்று அவதூறுகள் என பதிலடி கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நேரத்தில் தான் அமர்பிரசாத் ரெட்டி மீது பண மோசடி வழக்குகள் பாய்ந்தது. குறிப்பாக ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் அமர்பிரசாத் ரெட்டி மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் எந்நேரத்திலும் அமர்பிரசாத் ரெட்டி கைது செய்யப்படலாம் என கூறப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வசிக்கும் வாடகை வீட்டின் முன்பு அனுமதியின்றி கொடிக்கம்பம் நட்டு வைத்த புகாரில் சிக்கினார்.

மேலும் படிக்க | அண்ணன் கொலை? அம்மா - தங்கை எடுத்த விபரீத முடிவு! கண்கலங்க வைத்த சம்பவம்!

அந்தக் பாஜக கொடிக் கம்பம் அனுமதியின்றி வைக்கப்பட்டதற்கு பனையூரைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வேண்டுமென்றே அரசியல் உள்நோக்கத்துடன், மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் கொடிக்கம்பம் வைக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் இந்த கொடிக்கம்பத்தை அகற்ற பாஜகவினர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் கிரேண் வண்டியை கொண்டு வந்து கொடிக்கம்பத்தை அகற்றினர். 

இருப்பினும் அந்த கிரேணை பாஜகவினர் சேதப்படுத்தினர். இதனையடுத்து வாகனத்தின் உரிமையாளர் காவல்துறையில் புகார் அளித்தார். அதனடிப்படையில், கிரேண் வாகன கண்ணாடியை உடைத்த பாஜகவினர் கன்னியப்பன்(37), பாலகுமார்(35), ரமேஷ் சிவா(33), பாலவினோத் குமார்(34) உள்ளிட்ட 6 பேர் மீது அனுமதியின்றி கூடுதல், ஆபாசமாகப் பேசுவது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுப்பது, மிரட்டல் விடுப்பது, பொதுச் சொத்தை சேதப்படுத்துவது உள்ளிட்ட 7 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து  கானாத்தூர் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். இதில் தலைமறைவான அமர்பிரசாத் ரெட்டியை காவல்துறை தேடிக் கண்டுபிடித்து கைது செய்தது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அமர்பிரசாத் ரெட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதில் நவம்பர் 3 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் வர்ஷா உத்தரவிட்டார்.

இந்நிலையில், அமர்பிரசாத் மீது குண்டாஸ் பாய வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தென்காசி காவல் நிலையத்தில் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல தமிழகம் முழுவதும் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விபரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | உளவுத்துறையை குற்றம்சாட்டிய அண்ணாமலை... ஹை அலெர்டில் தமிழக போலீஸ் - பின்னணி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News