கோவை மேயர் குடும்பத்தினர் அட்டூழியம்: வீடு மீது சிறுநீர் ஊற்றுவதாக பெண் பரபரப்பு புகார்

வீட்டை காலி செய்ய வைக்க கோவை மாநகராட்சி மேயரின் குடும்பத்தினர் அருவறுக்கத்தக்க முறையில் தொந்தரவு செய்கிறார்கள் என பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 28, 2023, 06:52 PM IST
  • கோவை மேயர் குடும்பத்தின் அட்டூழியம்
  • பெண் வீட்டுக்கு தொடர்ச்சியாக தொந்தரவு
  • வீட்டில் சிறுநீர் பிடித்து ஊற்றுவதாக புகார்
கோவை மேயர் குடும்பத்தினர் அட்டூழியம்: வீடு மீது சிறுநீர் ஊற்றுவதாக பெண் பரபரப்பு புகார் title=

கோவை மணியகாரன் பாளையம் பகுதியில் உள்ள நட்சத்திரா கார்டனின் வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள் சரண்யா - கோபிநாத் தம்பதியினர். இவர்கள் இருக்கும் குடியிருப்புக்கு அருகாமையில் இருக்கும் கோவை மாநகராட்சி மேயரின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தங்கள் வீட்டை காலி செய்ய வைக்க பல்வேறு விதங்களில் மேயர் குடும்பத்தினர் தொந்தரவு செய்வதாகவும் மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்ட சரண்யா குடும்பத்தினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். அதில் தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.  

மேலும் படிக்க | 'எதற்கு மாநாட்டை நடத்தினோம் என அவர்களுக்கே தெரியவில்லை' - அதிமுகவை கேலி செய்த உதயநிதி

இது குறித்து சரண்யா கூறுகையில், தாங்கள் குடியிருக்கும் காம்பவுண்ட்டில் பக்கத்து வீட்டில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த்குமாரின் தாயார் காளியம்மாள் மற்றும் தம்பி குமார் வசித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு குமார் தங்களிடம் 15,000 ரூபாய் கடன் வாங்கியதாகவும் அதில் 5000 ரூபாயை மட்டுமே திருப்பி தந்ததாகவும், மேயர் கல்பான ஆனந்த்குமார் மேயாராக பொறுப்பேற்றதில் இருந்து மீதி தொகையை தரவில்லை என கூறினார்.

இந்நிலையில் மேயர் கல்பனா ஆனந்த்குமார் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக குமார் வீட்டில் தங்கி இருக்கிறார். இந்நிலையில் தான் வசித்து வரும் வீட்டை காலி செய்ய வைக்க மேயரின் தம்பி குமார் பல்வேறு விதங்களில் டார்ச்சர் செய்கிறார். தங்கள் வீட்டின் பின்னால் அழுகிய பழங்கள், கோழி இறைச்சிகள் உள்ளிட்டவற்றை குமார் வீசி செல்கிறார். அருவறுக்கத்தக்க வகையில் சிறுநீரை டப்பாவில் பிடித்து வந்து தங்கள் வீட்டின் சமையலறை பகுதியில் ஊற்றி செல்கிறார். அதுமட்டுமின்றி பூசணிக்காய், எலுமிச்சை இவற்றை கொண்டு மாந்திரிகம் போன்ற செயல்கள் செய்து வைத்து தொந்தரவு அளிக்கிறார்.

தங்களது வாகனங்களை வெளியே எடுக்க முடியாதவாறு அவர்களது வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். இவற்றையெல்லாம் கேமரா மூலம் பதிவு செய்துள்ள நிலையில் வீடியோ பதிவு செய்ததை அறிந்து குமார், சில ஆட்கள் கொண்டு மிரட்டுகிறார். தங்களுக்கு உயிர் பாதுகாப்பு வேண்டும். கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் மனு அளித்துள்ளோம். மேயர் குடியிருந்த ஆர்.எஸ்.புரம் அரசு குடியிருப்பில் அமானுஷ்ய நிகழ்வுகள் நடந்ததாக தெரிகிறது. எனவே தான் அவர் மீண்டும் இங்கேயே வந்துவிட்டதாக சரண்யா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | மக்களவை தேர்தலில் சுப்பர் ஸ்டாரின் வாய்ஸ் யாருக்கு? - டக்குனு பதில் சொன்ன ரஜினியின் அண்ணன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News