ஜனவரி 4 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்.. அரசு அதிரடி!

புதுச்சேரியில் ஜனவரி 4 ஆம் தேதி தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவிருப்பதாக கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்திருக்கிறார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 16, 2020, 12:51 PM IST
    1. அனைத்து வகுப்புகளும் ஜன.4ஆம் தேதியிலிருந்து காலை 10 மணி முதல் 1 மணி வரை செயல்படும்
    2. அரை நாள் மட்டும் செயல்படும் பள்ளிகளுக்கு விருப்பப்படும் மாணவர்கள் வரலாம்
    3. ஜன.18 முதல் முழுமையாக பள்ளிகளை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது
ஜனவரி 4 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்.. அரசு அதிரடி! title=

புதுச்சேரியில் ஜனவரி 4 ஆம் தேதி தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவிருப்பதாக கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்திருக்கிறார்.

கொரோனா வைரஸ் (CoronaVirus) காரணமாக கடந்த 9 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் (School) மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதற்கிடையில், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு (Online Class) மூலம் கல்வி கற்பித்து வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரியில் ஜனவரி 4 ஆம் தேதி தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவிருப்பதாக கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தகவல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கமலக்கண்ணன் (Minister kamalakannan) கூறுகையில், “புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் அனைத்து வகுப்புகளும் ஜனவரி 4 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. ஜனவரி 4 ஆம் தேதியில் இருந்து காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை வகுப்புகள் நடைபெறும். அரை நாள் மட்டுமே பள்ளிகள் செயல்படும். விருப்பப்படும் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம். ஜனவரி 18 முதல் முழுமையாக பள்ளிகளை செயல்படுத்த (Schools Reopening) முடிவு செய்யப்பட்டுருக்கிறது” என்று தெரிவித்தார்.

ALSO READ | அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ரத்து: செங்கோட்டையன்!

மேலும், புதுச்சேரியில் (Puducherry) கல்லூரிகளை திறப்பது குறித்து ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் கூறினார். அம்மாநிலத்தில் ஏற்கனவே 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது என்பது நினைவு கூரத்தக்கது. 

புதுச்சேரியில் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை இறுதியாண்டு வகுப்புகளும், ஆராய்ச்சி படிப்புகளும் 9 மாதங்களுக்குப் பிறகு நாளை முதல் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடதக்கது. 

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News