கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்ட 74 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார்.
சில நாட்களுக்கு முன்னதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது நாங்கள் யாரும் பார்க்கவில்லை. சசிகலா தரப்பு என்ன கூறியதோ அதையே மக்களிடம் தெரிவித்தோம்” என்று பேசினார்.
இந்நிலையில், இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ நான் உள்பட அனைத்து அமைச்சர்களும் மருத்துவமனையில் ஜெயலலிதாவை நேரில் சென்று பார்த்தோம்” என கூறினார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தது தொடர்பாக மாறுபட்ட கருத்துக்களை அமைச்சர்கள் தெரிவித்துள்ளதால், எது உண்மை என்று தெரியாத நிலையே இன்னும் நீடித்து வருகிறது.