ஐபிஎல் ரசிகர்கள் கவனத்திற்கு... மெட்ரோ நிர்வாகம் சொன்ன முக்கிய தகவல்!

IPL Playoffs: சென்னையில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் ப்ளேஆஃப் போட்டிகளை காண வரும் கிரிக்கெட் ரசிகர்கள் இனி இலவசமாக பயணிக்க இயலாது எனவும் பயணச்சீட்டு எடுக்க வேண்டும் எனவும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : May 22, 2023, 11:59 PM IST
  • போட்டி நடைபெறும் அன்று இரவு 1 மணிவரை ரயில் சேவை இருக்கும்.
  • பச்சை வழித்தடத்தில் செல்வோர் சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று மாறிக்கொள்ள வேண்டும்.
  • ஏனெனில், ஆலந்தூர் வழியாக அப்போது பச்சை வழித்தடத்தில் மாற இயலாது.
ஐபிஎல் ரசிகர்கள் கவனத்திற்கு... மெட்ரோ நிர்வாகம் சொன்ன முக்கிய தகவல்! title=

IPL Playoffs: நடப்பாண்டில் நடைபெற்று வரும் 16ஆவது ஐபிஎல் சீசன் தொடரை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் இணைந்து பல்வேறு வசதிகளை வழங்கி வந்தது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான பார்கோட் போடப்பட்ட கியூ.ஆர் டிக்கெட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்க ரசிகர்களுக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது

பிசிசிஐ ஏற்பாடு

இதனை தொடர்ந்து, நடக்க இருக்கும் ஐபிஎல் ப்ளேஆஃப் சுற்றுகள் முற்றிலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஐபிஎல் டிக்கெட்டுகளை மெட்ரோ ரயில் பயணச்சீட்டாக பயன்படுத்த இயலாது சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

வழக்கமான டிக்கெட்

ஆகையால் மே 23 மற்றும் 24ஆம் தேதிகளில் சென்னை, சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் பிளேஆஃப் போட்டிகளை கண்டுகளிக்க வருகை தரும் கிரிக்கெட் ரசிகர்கள், மெட்ரோ பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கு வழக்கமான மெட்ரோ ரயில் பயணச்சீட்டுகளை பெற்றுகொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க | இனி பும்ரா தேவையில்லை! இந்திய அணிக்கு கிடைத்த புதிய யார்க்கர் ஸ்பெசலிஸ்ட்!

இடையூறு இல்லாத பயணத்திற்கு, பயணிகள் மெட்ரோ இரயில் பயணச்சீட்டுகளை வாட்ஸ்அப் (91-8300086000), க்யூஆர் அல்லது சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மூலம் பெற்றுகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், ஏனெனில் டிக்கெட் கவுன்டர்கள் இரவு 11 மணிக்குப் பிறகு செயல்படாது.

பச்சை வழித்தடத்தில் பயணிப்போர் கவனத்திற்கு!

சென்னையில் போட்டி நடைபெறும் நாட்களில் கிரிக்கெட் ரசிகர்களுக்காக மே 23 மற்றும் 24 ஆகிய இரு தினங்களிலும் இரவு 1 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். நீல வழித்தடத்தில் அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து பச்சை வழித்தடத்தில் பயணிப்பதற்கு பயணிகள் புரட்சித்தலைவர் டாக்டர். எம். ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் மாறிகொள்ளலாம். 

ஏனெனில் நீல வழித்தடத்தில் இருந்து பச்சை வழித்தடத்திற்கு பயணிகள் மாறும் வசதி அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையத்தில் இரவு 11 மணிக்கு பிறகு இருக்காது. ஆகையால் நீல வழித்தடத்திலிருந்து பச்சை வழித்தடத்திற்கு மாறும் பயணிகள் புரட்சித்தலைவர் டாக்டர். எம். ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் மாறிக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அதற்கேற்ப தங்கள் பயணங்களை திட்டமிடுமாறும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

2 போட்டிகள்

ஐபிஎல் பிளே ஆப் சுற்று போட்டிகள் நாளை முதல் (மே 23) தொடங்க உள்ளன. அதில், குவாலிஃபயர் 1, எலிமினேட்டர் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், முறையே நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெற உள்ளது. குவாலிஃபயர் 1 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளும் மோதுகின்றன. இந்த இரு போட்டிகளின் அனைத்து டிக்கெட்களும் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | IPL 2023: கோடிகள் கொடுத்தும் பயனில்லை... ஏலத்தில் எடுத்த இந்த 4 வீரர்களை கழட்டிவிடும் அணிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News