தமிழகத்தில் அடுத்த சட்ட மன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியலில் பல காய் நகர்த்தல்கள் நடந்து வருகின்றன.
எந்த எந்த கட்சிகள் எந்த எந்த கூட்டணியில் இருக்கும் என்பது தேர்தல் நெருங்க நெருங்க வெட்ட வெளிச்சமாகி விடும்.
களத்தில் இப்போது அதிமுக(AIADMK) , திமுக (DMK) என இரு கட்சிகளை தவிர பாஜகவும் வலுபெற்று வருகிறது.
முதலில், முருகண் அவர்களை பாஜக தலைவராக நியமித்து, பாஜக சமூக நீதிக்கு எதிரான கட்சி என்பத்கை உடைத்தெறிந்த்து. இப்போது முன்னாள் காவல் துறை அதிகாரி அண்ணாமலை ஐபிஎஸ் வருகை அரசியல் களத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இளைஞர்கள் மத்தியில் அண்ணாமலை அவர்களுக்கு பெரும் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.
அது தவிர ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என நம்பிக்கை நிலவுகிறது. ரஜினி அரசியல் களத்திற்கு வந்து விட்டால், அரசியல் களம் முழுமையாக மாறி விடும்.
ரஜினியின் வருகையினால், திமுக, அதிமுக இரு கட்சிகளும் நிச்சயம் பாதிப்பை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் (J.Jayalalitha) நெருங்கிய தோழியான வி கே. சசிகலாவின் (V.K.Sasikala) விடுதலை தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அதிமுகவின் முன்னாள் எம்பி அன்வர் ராஜா கூறியுள்ளார்.
வி.கே.சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை செல்லும் முன்னர் கட்சியில் பல மூத்த தலைவர்கள் இருந்த போதிலும், எடப்பாடி பழனிசாமியை முதல்வராக அமரவைத்து விட்டு சென்றார்.
மேலும் படிக்க | அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகத்தில் மழை பெய்யும்..!!!
ஆனால், அதன் பிறகு பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு, சசிகலாவையும், தினகரனையும் ஒதுக்கி வைத்து விட்டு, எடப்பாடி பழனிச்சாமியும், ஓ. பன்னீர் செல்வமும் கை கோர்த்தது இணைந்தது நாம் அனைவரும் அறிந்ததே.
சசிகலா விடுதலை நெருங்கி வரும் நிலையில், கட்சியை ஒருங்கிணைத்து வைப்பதில் தலைமை கவனம் செலுத்தி வருகிறது. சசிகலா, எடப்பாடி பன்னீர் செல்வம், ஓ.பனீர்செல்வம் இணைந்தால், அதிமுக ஓட்டுக்கள் சிதறாமல் இருக்கும் என அதிமுக நினைக்கிறது.
அமமுக-வின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் (TTV Dinakaran) ஞாயிற்றுக்கிழமை டெல்லிக்கு சென்றதால், மாநில அரசியல் பல விதமான ஊகங்களை ஏற்படுத்தியுள்ளன.
சிலர் அவர் சசிகலாவின் விடுதலை தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்க சென்றார் என கூறுகின்றனர். சிலர் இது அரசியல் ரீதியிலான பயணம் என கருதுகின்றனர்.
ALSO READ | TTV Dinakaran-னின் தில்லி பயணம்: தமிழக அரசியலில் பெரும் சலசலப்பு!!
ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் விடுதலை தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அதிமுகவின் முன்னாள் எம்பி அன்வர் ராஜா கூறியுள்ளது அனைவராலும் கவனிக்கப்படுகிறது.
சசிகலா, தனது ஆதரவாளர்களை ஈர்த்தால், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகிய இருவரின் எதிர்காலம் என்னவாகும், அதிமுகவில் என்ன விதமான தாக்கத்தை இது ஏற்படுத்தும் என்பது பரவலாக எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளது.
மேலும் படிக்க | தனியாரால் புறக்கணிக்கப்படும் வட சென்னைவாசிகள், ஆபத்பாந்தவனாகும் BSNL..!!!
சசிகலாவின் ஆதாரவாளர்கள், அதிமுகவில் அதிகம் என்பதால், அவர் வெளியே வந்த பின்னர் பல்வேறு திருப்பங்கள் தமிழக அரசியல் களத்தில் நிகழலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அதிமுகவில் உள்ள சசிகலாவின் அபிமானிகள், அவருடன் இணைவார்களா அல்லது சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் மூவரும் இணைந்து ஒற்றை தலைமையுடன் சட்ட மன்ற தேர்தலில் வலுவாக சந்திக்குமா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR