நீண்ட ஆலோசனைக்கு பிறகு அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

வரும் 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 18, 2019, 08:19 AM IST
நீண்ட ஆலோசனைக்கு பிறகு அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு title=

மக்களவை தேர்தலையும், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலையும் சந்திக்க அதிமுக தயாராகி வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி என அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் மொத்தம் 40 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் அதிமுக 20 இடங்களில் களம் காண்கிறது. அந்த தொகுதிகள திருவள்ளூர்(தனி), சென்னை தெற்கு, காஞ்சிபுரம்(தனி), திருவண்ணாமலை, ஆரணி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி(தனி), பொள்ளாச்சி, கரூர், பெரம்பலூர், சிதம்பரம்(தனி), மயிலாடுதுறை, நாகப்பட்டினம்(தனி), மதுரை, தேனி, திருநெல்வேலி ஆகிய 20 தொகுதிகளில் ஆகும். 

இந்தநிலையில், 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்ற நீண்ட ஆலோசனைக்கு பிறகு நேற்று இரவு 20 தொகுதிக்கான வேட்பாளர்கள் விவரங்களை அதிமுக வெளியிட்டது. அதன் விவரங்கள் பின்வருமாறு.....

 

1. திருவள்ளூர்(தனி) - வேணுகோபால் 
2. சென்னை தெற்கு - ஜெயவர்தன் 
3. காஞ்சிபுரம் (தனி) - மரகதம் குமரவேல்
4. கிருஷ்ணகிரி - முனுசாமி
5 திருவண்ணாமலை - அக்ரி கிருஷ்ணமூர்த்தி
6. ஆரணி - செஞ்சி வெ. ஏழுமலை
7. சேலம் - சரவணன்
8. நாமக்கல் - காளியப்பன்
9 ஈரோடு - வெங்கு (எ) மணிமாறன்
10. திருப்பூர் - ஆனந்தன் 
11. நீலகிரி (தனி) - தியாகராஜன்
12. பொள்ளாச்சி - மகேந்திரன் 
13. கரூர் - தம்பிதுரை
14. பெரம்பலூர் - சிவபதி
15. சிதம்பரம் (தனி) - சந்திரசேகர்
16. மயிலாடுதுறை - ஆசைமணி
17. நாகப்பட்டினம் (தனி) - தாழை.ம. சரவணன்
18 மதுரை - ராஜ்சத்யன்
19. தேனி - ரவீந்ரநாத் குமார் 
20. திருநெல்வேலி - மனோஜ் பாண்டியன்

Trending News