அதிமுக பொதுக்குழு நாளை கூட உள்ள நிலையில் இருதரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது.
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று கடும் மோதல் ஏற்பட்டது. அதாவது அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் மனுவை பெற ராயபேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகம் வருகை தர இருப்பதாக தகவல் வந்தது.
இதனையடுத்து கட்சி அலுவலகம் முன்பு அதிமுக தொண்டர்கள் குவிந்தனர். ஆனால் சசிகலா புஷ்பா வரவில்லை. அவரது சார்பில் அவரது வழக்கறிஞர்கள் வந்திருந்தனர். இதனால் அங்கு இருதரப்பினரி டையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை நிலவியது. சசிகலா புஷ்பா வக்கீல் ரத்தம் சொட்ட சொட்ட படுகாயம் அடைந்துள்ளார். அவர்களை போலீசார் அங்கு இருந்து அகற்றினர். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிபட்டு உள்ளார்.
#WATCH: Suspended AIADMK MP Sasikala Pushpa's lawyer attacked outside party office by AIADMK workers in Chennai. pic.twitter.com/u10t63TmzX
— ANI (@ANI_news) December 28, 2016