ரிசார்டில் அதிமுக அடித்த கூத்துகள் விரைவில் வெளிவரும்

Last Updated : Feb 23, 2017, 03:02 PM IST
ரிசார்டில் அதிமுக அடித்த கூத்துகள் விரைவில் வெளிவரும் title=

கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏ.க்க நடத்திய கூத்துகளை விரைவில் ஆதாரங்களுடன் வெளியிடுவேன் என ஓ. பன்னீர்செல்வம் அணி அதிமுக எம்.பி., சுந்தரம் தெரிவித்துள்ளதார்.

அதிமுக இரண்டாக பிளவுபட்ட நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சசிகலா தரப்பால் கூவத்தூரில் சிறை வைக்கப்பட்டனர். அப்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தவர் நாமக்கல் எம்.பி. சுந்தரம்.

அவர் சென்னையில் இருந்து ராசிபுரத்துக்கு நேற்று வருகை தந்தார். அங்கு அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வரவேற்றனர்.

அவர்களிடம் பேசிய எம்.பி. சுந்தரம், கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் என்ன கூத்துகளை நடத்தினார் என்பதற்காக ஆதாரங்கள் உள்ளன விரைவில் இதை ஆதாரங்களுடன் வெளியாகும். 

Trending News