ஓ.பன்னீர்செல்வம் மனைவி மாரடைப்பால் காலமானார்

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். ஓ.பன்னீர்செல்வம் மனைவி மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 1, 2021, 12:39 PM IST
ஓ.பன்னீர்செல்வம் மனைவி மாரடைப்பால் காலமானார் title=

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். ஓ.பன்னீர்செல்வம் மனைவி மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ஓ.பன்னீர்செல்வத்தின் (O Panneerselvam) மனைவி விஜயலட்சுமி கடந்து ஒரு வாரம் வயிறு உபாதை காரணமாக பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதன்படி இன்று காலை சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட்டு அவர் காலமானார். ஓ.பன்னீர்செல்வம் மனைவி இறந்த தகவல் அறிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றனர்.

ALSO READ | தமிழகத்தில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு; புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இதோ

பெருங்குடியில் தனியார் மருத்துவமனைக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமிக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று ஒ.பன்னீர்செல்வத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் முதல்வர் ஸ்டாலின் உடன் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்ரமணியன் ஆகியோரும் வருகை தந்தனர்.

இந்நிலையில் விஜயலட்சுமியின் உடல் மருத்துவமனையில் தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தலைவர்கள் அஞ்சலிக்குப்பின் ஓபிஎஸ் மனைவியின் உடல் தலைவர்கள் அஞ்சலிக்குப்பின் நேரடியாக சொந்த ஊரான தேனி பெரியகுளத்திற்கு கொண்டுச் செல்லப்படுகிறது. பெரிய குளம் தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள ஓட்டக்கார தேவர் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. இறுதிச்சடங்குகள் பெரியகுளத்தில் நடைபெறும். 

இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் மரணத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ | TN corona update District Wise மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News