கோவை: இன்று அதிகாலை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி, கோவை லாலிரோட்டில் உள்ள அவரது இல்லத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். கைது செய்யப்பட்ட அவரிடம் மேலும் விசாரணை மேற்கொள்ள சூலூர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
முன்னதாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் பாஜக அரசு கடுமையாக விமர்சித்த அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமியை கட்சியில் இருந்து அதிமுக நீக்கியது. அதாவது கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக அதிமுக அறிவித்தது. மேலும் கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளகூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அதிமுக ட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியாதவது, "கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருப்பூர் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.சி.பழனிசாமி, இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கிவைக்கப்படுகிறார்.
கழக உடன் பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளகூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் செய்திக் குறிப்பில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கையெழுத்திட்டனர்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.