அடுத்த ஸ்கெட்ச் ரெடி! கைது ஆகிறாரா முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்?

திமுக அரசு என்னை கைது செய்யாமல் விடமாட்டார்கள். எதற்கும் நான் தயாராக இருக்கிறேன் என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Shiva Murugesan | Last Updated : Mar 1, 2022, 01:45 PM IST
  • பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், காவல்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்தல்
  • முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், காவல்துறையினரை மிரட்டும் வகையில் விமர்சனம்.
  • பொதுவெளியில் தகாத வார்த்தையால் முதலமைச்சர், அரசு அதிகாரிகள், காவல்துறையினரை விமர்சிப்பதாக புகார்.
அடுத்த ஸ்கெட்ச் ரெடி! கைது ஆகிறாரா முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்? title=

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி விழுப்புரத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் கடந்த 14-ம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். அப்போது அவர், விழுப்புரம் மாவட்ட போலீஸாரை பொது இடத்தில் அவதூறாகவும், ஆபாசமாகவும், மிரட்டல் விடுத்தும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் புகார் அளித்தார்.

அவரின்புகாரின் அடிப்படையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், காவல்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்தல் என 294 (பி), 504 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டிக்கின்ற வகையில் திமுக அரசை எதிர்த்து நேற்று விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், காவல்துறையினரை மிரட்டும் வகையில் விமர்சித்து வந்தார். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி வந்ததும் திமுகவினரை பழிவாங்குவோம் என பேசினார். 

மேலும் படிக்க: அடுத்தடுத்து வழக்கு.. தொடரும் சிறைவாசம்.. ஜெயகுமாருக்கு மார்ச் 11 வரை காவல்

இந்தநிலையில் வீரத் தமிழர் பேரவையின் தலைவர் தங்க. பாஸ்கரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் பொதுவெளியில் தகாத வார்த்தையால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு அதிகாரிகள், காவல்துறையினரை முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விமர்சிப்பதாக தெரிவித்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளதாக தங்க பாஸ்கரன் தெரிவித்தார்.

முன்னதாக சிவி சண்முகம் மீது விழுப்புரம் காவல்துறையினரும்  வழக்குப்பதிவு செய்திருநதனர். இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கைது செய்ய இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து திண்டிவனத்தில் உள்ள சிவி சண்முகத்தின் வீட்டு முன் சிவி சண்முகத்தின் அண்ணன் சிவி ராதாகிருஷ்ணன் தலைமையில் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

அப்போது சென்னையில் இருந்து திண்டிவனம் வந்த சிவி சண்முகத்தை பார்த்த தொண்டர்கள் திமுகவினருக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது தொண்டர்களிடம் பேசிய சிவி சண்முகம், திமுக அரசு தன்னை கைது செய்யாமல் விடமாட்டார்கள் என்றும், எனவே எதற்கும் தயாராக உள்ளதாக கூறினார்.

விழுப்புரம் மற்றும் திண்டிவனம் காவல் நிலையங்களில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வரை தரம் தாழ்த்திப் பேசியதாக இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதன் தொடர்ச்சியாக சிவி சண்முகம் இன்று இரவு கைது செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க: அடுத்தடுத்து திமுகவில் இணையும் அதிமுக கவுன்சிலர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News