பொன்பரப்பி, பொன்னமராவதி சம்பவங்களுக்கு காரணமானவர் மீது நடவடிக்கை: ADMK
பொன்பரப்பி, பொன்னமராவதியில் நடைபெற்ற சம்பவங்களுக்கு காரணமான அனைவரின் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் உறுதி!!
பொன்பரப்பி மற்றும் பொன்னமராவதி ஆகிய இடங்களில் சில நாட்களாக பதட்டம் நிலவி வருகிறது. இரு பகுதிகளிலும் நடைபெற்ற வன்முறை சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இச்சம்பவங்கள் குறித்து அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், கடந்த வியாழக்கிழமை அன்று அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், பொன்பரப்பி கிராமத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட பிரச்சனையிலும்; புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டத்தில், சமூக வலைத்தளம் காரணமாக, இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட பிரச்சனையிலும், மாவட்ட நிர்வாகமும், காவல் திரையும் உடனடியாகத் தலையிட்டு அங்கு சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டது. நிலைமை தொடர்ந்து தீவிறாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக ஏற்பட்ட இந்த இரு சம்பவங்களும் வேதனைகுரிய ஒன்றாகும். இவ்விரு மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையின் கீழ் சமந்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்த தலைவர்களை அரசு அதிகாரிகள் தொடர்பு கொண்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையும் எடுத்து வரும் நடவடிக்கைகள் அவ்வபோது தெரியவருகிறது. அமைதி காக்க அதிகாரிகள் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
மேலும், இச்சம்பவங்களுக்கு காரணமான அனைவரின் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ப்பட வேண்டும் என்பதில் அனைத்திந்திய அதிமுக கட்சி உறுதியாக இருக்கிறது என்பதை தெரிவிவ்த்துகொல்கிறோம்.