டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-1 தேர்வு எழுதும் பொது பிரிவினருக்கான வயது வரம்பு 30 வயதிலிருந்து 32 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் இது தொடர்பான அறிவிப்பை சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதில், SC., ST., பிரிவு தேர்வாளர்களுக்கான வயது வரம்பு 35-லிருந்து 37-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பிற பிரிவினருக்கு 30-ல் இருந்து 32-ஆக உயர்த்தப்பட்டுள்ளது மேலும் இந்த மாற்றமானது குரூப் 1, 1ஏ, 1பி தேர்வை எழுதுவோருக்கு பொருந்தும் எனவும், DSP துணை ஆட்சியர் உள்ளிட்ட உயர் பதவிகள் நிரப்பப்படும் TNPSC குரூப் 1 தேர்வாளர்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு உயர்வு தொடர்பாக இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.