தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு 2021 பிப்ரவரி மாதம் வெளியானது. அன்று முதலே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அப்போது, தமிழகம் முழுவதும் உள்ள தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் திருவுருவச் சிலைகள் மூடி வைக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கவுண்டம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் உள்ள மகாத்மா காந்தி, கர்மவீரர் காமராசர், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரின் திருவுருவச் சிலைகளும் துணிகளைக் கொண்டு மூடி வைக்கப்பட்டன.
தொடர்ந்து தேர்தல் முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டன. அதன்பின்னர், தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் பெறப்பட்டன. அதன்பிறகு தமிழகம் முழுவதும் மூடி வைக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள் மீண்டும் திறக்கப்பட்டன.
மேலும் படிக்க | தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள சிலைகளை அகற்ற வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு
ஆனால் சேலம் பிரதான சாலையில் உள்ள கவுண்டம்பட்டி, மூக்கரெட்டிபட்டி ஆகிய பேருந்து நிறுத்தங்களில் அமைந்துள்ள மகாத்மா காந்தி, கர்மவீரர் காமராசர், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரின் திருவுருவச் சிலைகள் தற்போதுவரை திறக்கப்படாமல் துணிகள் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் விதிகள் வாபஸ் பெறப்பட்டு ஓராண்டு ஆகியும் இன்னும் தலைவர்களின் சிலைகள் மூடியே கிடக்கின்றன. தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தும் அதிகாரிகளின் பார்வையில் இன்னும் இந்த தலைவர்களின் சிலைகள் படவில்லையா என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகள் உடனடியாக தலைவர்களின் சிலைகள் மீதுள்ள துணிகளை அப்புறப்படுத்தி திறந்து வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க | காவி நிறத்திலிருந்து பழைய நிலைக்கு மாறிய அம்பேத்கர்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR