வயதானவர்கள், வசதி வாய்ப்பற்றவர்கள் தேர்தலில் சீட் கேட்காதீர் என அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மல்லியில் உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர்., அதிமுக-வில் வயதானவர்கள், வசதி வாய்ப்பற்றவர்கள் தேர்தலில் சீட் கேட்காதீர் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், பிரிந்து போனவர்கள் தற்போது அதிமுக இணைந்துள்ளார்கள் எனவும், அண்ணன் தம்பிகளுக்கிடையே உண்டான சண்டை மட்டுமே தங்களிடையே நடைப்பெற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதிமுக-வில் ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள கட்சி, பெரிய கட்சிக்கு சண்டை இருக்கத்தான் செய்யும். இனி அதிமுக மட்டுமே ஆளனும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது அதுகுறித்து பேசி அவர்., வசதி வாய்ப்பு இல்லாத வயதானவர்களுக்கு சீட் கொடுக்க முடியாது எனவும், இது கம்யூட்டர் காலம் என்பதால் இளைஞர்களைத் தேர்வு செய்து சீட்டு கொடுங்கள் எனவும் பேசினார். இதனிடையே திமுக கட்சி அழிந்து வருவதாகவும், அதில் உள்ளாட்சித் தேர்தலில் சீட் கேட்க ஆள் இல்லை எனவும் விமர்சித்தார்.
நாடாளுமன்றத்தில் அதிமுக-வுக்கு பின்னடைவு ஏற்பட்டதாகவும், வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-வின் சங்கை நசுக்கி பிடித்தோம் விட்டா போதும் என 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே திமுக வேட்பாளர் ஜெயித்து விட்டார். சங்கை இறுக்கி பிடித்தால் சோலி முடிஞ்சிருக்கும் அதிமுக ஜெயித்திருக்கும் எனவும் அவர் பேசினார்.
வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை மத பிரச்சனையை தூண்டி விட்டு திமுக ஜெயித்தார்கள் எனவும், தற்போது இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் அதிமுக பக்கம் உள்ளனர் எனவும் தெரிவித்த அவர், அவர்கள் இதிமுக-விற்கு தான் வாக்களிப்பார்கள் எனவும் பேசினார்.