அனைவரும் ஒன்றிணைந்தால் அதிமுகவை வெல்ல முடியாது - ஓ.பன்னீர்செல்வம்!

அனைவரும் ஒன்றிணைந்தால் அ.தி.மு.க.வை யாராலும் வெல்ல முடியாது என ஓ.பன்னீர்செல்வமும், மாற்றத்திற்கு இடம் கொடுக்காமல் அனைவரும் இணைந்து செயல்படுவோம் என டிடிவி.தினகரனும் பேச்சு.    

Written by - RK Spark | Last Updated : Jun 7, 2023, 01:33 PM IST
  • 7-ம் தேதி. எம்.ஜி.ஆருக்கு பிடித்தமான தேதி.
  • தஞ்சையில் எது செய்தாலும் வெற்றி தான்.
  • அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும்.
அனைவரும் ஒன்றிணைந்தால் அதிமுகவை வெல்ல முடியாது - ஓ.பன்னீர்செல்வம்! title=

தஞ்சாவூரில் ஓபிஎஸ் ஆதரவாளரும்  ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் மகன் இல்ல திருமணத்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இருவரும் இணைந்து நடத்தி வைத்தனர்.  பின்னர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், இன்று 7-ம் தேதி. எம்.ஜி.ஆருக்கு பிடித்தமான தேதியாகும். மணமக்கள் எல்லா வளமும் பெற்று வாழ வேண்டும். அ.தி.மு.க.வை தொண்டர்களின் இயக்கமாக தோற்றுவித்தவர் எம்.ஜி.ஆர், அவரது மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வை கட்டுகோப்புடனும், ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்காகவும் வழி நடத்தி தமிழகத்தில் பொற்கால ஆட்சியை எம்.ஜி.ஆர் வழியில் நிலை நிறுத்தியவர் ஜெயலலிதா. பல்வேறு சோதனைகள், சதி வலைகளை உடைத்து மாபெரும் இயக்கமாக உருவாக்கினார். 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்ட கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வந்தது என்றால் அது ஜெயலலிதாவால்தான்.  

மேலும் படிக்க | திருமண நிச்சயதார்த்தத்தில் பாயாசத்திற்கு சண்டை!

அ.தி.மு.க.வின் தூய தொண்டர்களின் எண்ணமே அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பது தான். தொண்டர்கள் தான் இயக்கத்தின் ஆணிவேர், அச்சாணி. மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை மலர செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அப்படி ஒன்றிணைந்து அரசியல் களத்தில் விளையாடினால் நம்மளை வெல்ல இந்தியாவிலே யாரும் கிடையாது. அம்மாவின் ஆட்சியை அமைப்பதற்கான பிள்ளையார் சுழி இன்று போடப்பட்டுள்ளது. தஞ்சையில் எது செய்தாலும் வெற்றி தான். அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது தான் ஜெயலலிதா ஆன்மாவின் எண்ணமாக இருக்கும் எனவும் அவர் என ஓபிஎஸ் பேசினார்.

முன்னதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் டிடிவி தினகரன் பேசுகையில், சிலரின் பேராசையால் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கனத்த இதயத்தோடு பிரிந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கினோம். இப்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக நிர்வாகிகள் ஒரே மேடையில் சந்திப்பது மகிழ்ச்சி. இன்று திருமணம் மற்றும் இணைப்பு விழா மகிழ்ச்சி என இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது. பழைய நண்பர்களை சந்திப்பது மகிழ்ச்சி. இதற்காக வைத்திலிங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அமுமுக - அதிமுகவுடன் இணைந்து செயல்பட தொடங்கிவிட்டது. இந்த இணைப்பு துரோகிகளுக்கு பாடம் கற்பித்து, திமுகவை அகற்றி, எந்த மனமாற்றத்திற்கும் இடம் கொடுக்காமல் அனைவரும் இணைந்து செயல்படுவோம் என அவர் தெரிவித்தார்.  தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் இந்த திருமண விழா நடைபெற்றது. விழாவிற்கு ஏராளமான அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் வந்ததால், தஞ்சை - திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க - 'ஜன்னல் கம்பியை பிடித்து உயிர் தப்பினேன்' - மரண ஓலத்தை கண்ட தமிழர் சோகம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News