ADMK 47-வது ஆண்டு துவக்க விழா; MGR, ஜெயலலிதா சிலைக்கு மரியாதை...

ADMK-வின் 47-வது ஆண்டு துவக்க விழாவில் MGR மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு முதலமைச்சர் மரியாதை...! 

Last Updated : Oct 17, 2018, 01:00 PM IST
ADMK 47-வது ஆண்டு துவக்க விழா; MGR, ஜெயலலிதா சிலைக்கு மரியாதை... title=

ADMK-வின் 47-வது ஆண்டு துவக்க விழாவில் MGR மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு முதலமைச்சர் மரியாதை...! 

அதிமுக 47-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள MGR, ஜெயலலிதா சிலைகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அக்கட்சியின் 47-வது ஆண்டு தொடக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் O.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று அங்குள்ள MGR, ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

கட்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது மரணமடைந்த 7 நிர்வாகிகளின் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. பின், கட்சியினருக்கான பிற நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை ஓ.பி.எஸ்., மற்றும் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

DMK தலைவர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து, ADMK-வை 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி MGR தோற்றுவித்தார். 1977 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ADMK அமோக வெற்றிபெற்றது. 

அதனை தொடர்ந்து 27 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகிறது. தமிழகத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி என்ற பெருமையுடன் ADMK திகழ்வது குறிப்பிடத்தக்கது..! 

 

Trending News