கருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் நடிகர் அஜித்!!

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல் நலம் குறித்து திமுக செயல் தலைவர் முகஸ்டாலின் அவர்களிடன் கேட்டறிந்தார் நடிகர் அஜித்.

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 1, 2018, 08:56 PM IST
கருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் நடிகர் அஜித்!! title=

கடந்த ஜூலை 27-ஆம் நாள் இரவு திமுக தலைவர் கருணாநிதிக்கு உயர் இரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டததை அடுத்து, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காவிரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது அவர் அபாயக்கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தமிழக அரசியல் வரலாற்றின் முக்கிய தலைவரான கருணாநிதியை சந்திக்க பலர் மருத்துவமனை வந்தவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் விஜய் உள்ளிட்ட பல நடிகர்கள் காவேரி மருத்துவமனை சென்று நலம் விசாரித்து வந்த நிலையில், தற்போது நடிகர் அஜித் குமார் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையை குறித்து, அவரது குடும்பத்தாரிடம் நலம் விசாரித்தார் நடிகர் அஜித்.

 

Trending News